OTT Movie: கடைசி 30 நிமிடங்கள் கண்ணீரில் கலங்கடிக்கும்.. ஓடிடியில் வெளியான Couple Friendly எப்படி இருக்கு?
Couple Friendly OTT Review: தெலுங்கு சினிமாவில் கடந்த 2026 பிப்ரவரி 14ம் தேதியில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான படம்தான் கப்புள் பிரெண்ட்லீ. இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், மக்களால் புகழப்பட்டுவருகிறது. அவ்வாறு புகழ்வதற்கு இந்த படம் அப்படி என்ன செய்திருக்கிறது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தெலுங்கு இயக்குநர் அஷ்வின் சந்திரசேகர் (Ashwin Chandrasekar) இயக்கத்தில், கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கப்புள் பிரெண்ட்லீ (Couple Friendly). இப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தோஷ் சோபன் (Santosh Sobhan) மற்றும் நடிகை மனசா வாரணாசி (Manasa Varanasi) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது தெலுங்கு மொழியை மையமாக கொண்ட காதல் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் அஷ்வின் சந்திரசேகர் இயக்க, ஆதித்யா ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். முழுக்க காதல் மற்றும் பீல் குட் கதைக்களத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ஓரளவு நல்ல விமர்சனங்களையே பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இப்படமானது தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் (Amazon Prime OTT) செய்யப்பட்டுவருகிறது.
இந்த படமானது காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருக்கும் நிலையில், ஓடிடியில் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. அந்த வகையில் இதன் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!




கப்புள் பிரெண்ட்லீ திரைப்படம் எப்படி இருக்கு :
இந்த கப்புள் பிரெண்ட்லீ படத்தில் நடிகர் சந்தோஷ் சோபன், “சிவா சாய்” என்ற கதாபாத்திரத்திலும், நடிகை மனசா வாரணாசி “மித்ரா” என்ற கதாபாத்திரத்திழும் நடித்துள்ளனர். இந்த் கப்புள் பிரெண்ட்லீ திரைப்படம் சாதாரணமாக காதல் கதைதான். ஆனால் மக்கள் இவ்வளவு தூரம் இப்படத்தை கொண்டாடுவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது, “சில பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு கிடைக்காது, அந்த பிரச்னை முடியும்வரை அன்பானவர்களோடு இருங்கள்” என்பதுதான் இந்த படத்தின் மைய கருத்து என்று கூறலாம். தனது வேலைக்காக சென்னை வந்த, சிவாவுக்கும், தனது திருமணத்திலிருந்து தப்பிப்பதற்காக சென்னை வந்த மித்ராவிற்கும் இடையே சந்திப்பு நிகழ்கிறது.
இதையும் படிங்க: மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி… இயக்குநர் வி.இசட். துரை இயக்கத்தில் நடிக்கும் சுந்தர் சி
தனது திருமணத்தை தவிர்த்து, வேலைகளை சென்னை வந்த மித்ரா, தன்னுடைய வேலையை மறந்துவிட்டு சிவாவிற்கு உதவி செய்ய தொடங்குகிறார். சிவாவின் வறுமையை தெரிந்தும் மித்ரா அவருக்காக உதவி செய்ய துடிக்கிறார். அவரின் உதவி சிவாவிற்கு, மித்ராவிடம் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. பின் இவ்விருவரும் காதலர்களாக மாறுகிறார்கள். இந்த படத்தில் இயக்குநர் அஷ்வின் சந்திரசேகர் தனது கதை, வசனத்தினால் ரசிகர்களை கவர்ந்திருனார் என கூறலாம்.
சிவா மற்றும் மித்ரா இருவருமே திருமண உறவில் இணைய நினைக்கும்போது மித்ராவிற்கு, மறதி பிரச்னை ஏற்படத்தொடங்குகிறது. அது போக போக சீரியஸ் ஆகும் நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இப்படத்தின் கடைசி 30 நிமிடங்கள் பார்ப்பவர்களை கலங்கவைக்கும். இந்த திரைப்படமானது தற்போது ட்ரெண்டிங் படங்களில் ஒன்றாக இருக்கிறது. எதிர்பார்க்காத எண்டிங்கை இப்படம் கொடுத்திருந்தாலும், அவ்வளவு அருமையான பீல் குட் திரைப்படமாக இருக்கும். இதை நிச்சயம் அமேசான் பிரைம் ஓடிடியில் மறக்காமல் பாருங்கள்.