Jason Sanjay: அம்மா.. தங்கையை விட.. அப்பா எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தார் – ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!
Jason Sanjay About Father CM Vijay Support: தமிழ் சினிமாவில் சிக்மா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகியுள்ளவர் ஜேசன் சஞ்சய். இவர் தமிழக முதல்வர் விஜய்யின் மூத்த மகன் என்ற நிலையில், இவருக்கு வரவேற்பு அதிகம். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனது தந்தை கொடுத்த ஆதரவு குறித்து விவரமாக பேசியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் (CM Vijay) மூத்த மகன்தான் இயக்குநர் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவர் ஆரம்பத்தில் சினிமாவில், சிறுவயதில் “வேட்டைக்காரன்” படத்தில் பாடல் ஒன்றில் நடனமாடியிருந்தார். அந்த பாடலுக்கு பின் பெரிதாக அவர் படங்களில் எதுவும் நடிக்கவில்லை. தற்போது இவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் முதல் முதலாக உருவாகியுள்ள திரைப்படம்தான் சிக்மா (Sigma). இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சுபாஸ்கரன் தயாரிக்க, சிறப்பாக உருவாகியுள்ளது. இதில் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) மற்றும் ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) இணைந்து நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் மற்றும் கொள்ளை தொடர்பான கதைக்களத்தில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அந்த வகையில், அண்மையில் தெலுங்கு நேர்காணல் ஒன்றில் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டார். அந்த பேட்டியில் அவர், தனது தண்டாகியும், தமிழக முதல்வருமான விஜய்யின் ஆதரவு குறித்து பெருமையாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: நிவின் பாலி – மமிதா பைஜூவின் ‘பெத்லஹேம் குடும்பா யூனிட்’ படத்தின் கதை இதுவா?
தனது தந்தை விஜய் கொடுத்த ஆதரவு குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசிய விஷயம்:
அந்த இன்டெர்வியூவில் ஜேசன் சஞ்சய், “என் தந்தையை பல ஆண்டுகளாக சினிமாவில் பார்த்திருக்கிறேன், அதனால் சிறு வயதிலிருந்தே எனக்கு அதில் ஆர்வம் இருந்தது. நான் வெளிநாடு சென்று, சுயமாகத் தொழில் தொடங்கி, திரைப்படத் தயாரிப்பை ஒரு படிப்பாகத் தொடர விரும்புவதாக அவரிடம் சொன்னபோது, அவர் சற்றும் தயங்கவில்லை. எனக்கு முதலில் சம்மதம் தெரிவித்தவர் அவர்தான்.
இதையும் படிங்க: அஜித்தின் படங்களை ஏன் தயாரிக்கவில்லை? – விளக்கம் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி!
எனது அம்மா மற்றும் தங்கையை விடவும், அவரே எனக்கு அதிக ஆதரவு அளித்தார். இப்போது சினிமா தொடர்பான பல படிப்புகள் உள்ளன என்பதை அறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர், “நீ போய் பார், உனக்கு அதுபற்றிப் புரியும்” என்றார். அதனால், அவர் இதற்கு மிகவும் ஆதரவாக இருந்து வருகிறார்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
தனது தந்தை முதல்வர் விஜய் குறித்து நேர்காணலில் பேசிய ஜேசன் சஞ்சய் தொடர்பான பதிவு:
Q: What Suggestions Did Your Father Vijay Give You When You Took Up Direction..❓#JasonSanjay: I’ve seen my father in that profession for so many years, so I’ve always had an interest in it from a young age. When I told him that I wanted to go overseas, become independent, and…
— Laxmi Kanth (@iammoviebuff007) August 8, 2026
முதல்வர் விஜய் சினிமாவிலிருந்து முழுமையாக விலகிவிட்டார். இவரின் கட்சி படமான ஜன நாயகன் திரைப்படமும் கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பின் விஜய் சினிமாவில் நடிக்கப்போவதில்லை. ஆனால் தற்போது அவரின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குநராக நுழைந்துள்ளார். இவர் இயக்கியுள்ள சிக்மா படமானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிது.