Jason Sanjay: எனக்கென தனி அடையாளம்.. அப்பா கொடுத்த அட்வைஸ் – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!
CM Vijays Powerful Advice for Son: சிக்மா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்திருப்பவர் ஜேசன் சஞ்சய். இவர் தமிழக முதல்வர் விஜய்யின் மூத்த மகன் என்ற நிலையில், அவரின் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம். இந்நிலையில் சினிமாவில் நுழைவதற்கு முன் தனது தந்தை விஜய் கொடுத்த அட்வைஸ் குறித்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் நாயகனாக மிகவும் பிரபலமானவர் நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் தற்போது முழுமையாக சினிமாவிலிருந்து விலகிய நிலையிலும், மக்களின் ஆதரவால் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். தமிழக முதலமைச்சராக தனது பணியை விஜய் (CM Vijay) சிறப்பாக செய்துவருகிறார். இவரின் மகனும், தற்போது இயக்குநராகவும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளவர் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவர் இயக்குநராக இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்தான் சிக்மா (Sigma). இந்த படத்தில் சந்தீப் கிஷன் (Sundeep Kishan), ஃபரியா போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளது. அதன் காரணமாக படத்தின் புரோமோஷன் பணிகளும் சிறப்பாக தொடங்கியுள்ளது.
அந்த வகையில், ஜேசன் சஞ்சய் தொடர்ந்து நேர்காணலில் கலந்துகொண்டு வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், தந்தையும் முதல்வருமான விஜய் தனக்கு கொடுத்த அட்வைஸ் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: உண்மையிலே ஒரு வரலாற்று தருணம்.. பொறுப்புகளும் அதிகமாக இருக்கு – முதல்வர் விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!
தந்தை முதல்வர் விஜய் சினிமாவில் தனக்கு கொடுத்த அட்வைஸ் குறித்து மனம் திறந்த ஜேசன் சஞ்சய்:
அந்த நேர்காணலில் பேசிய ஜேசன் சஞ்சய், அப்பா (முதல்வர் விஜய்) எனக்குக் கொடுத்த அறிவுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் எனக்கென ஒரு தனி அடையாளத்தையும் பெயரையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். நானும் அதே மனநிலையில்தான் இருந்தேன். நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம், அது எங்கள் இருவருக்கும் பொருத்தமாக இருந்தது. உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், நீ என்னை அணுகலாம், ஆனால் நீயே முன்முயற்சி எடுத்து வா. நான் வந்து கேட்க மாட்டேன்” என்று அவர் என்னிடம் கூறினார்.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் கொடுத்த ஆன்மிக புத்தகம்.. நெகிழ்ச்சியாக வீடியோவை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா!
நான் அந்த அனுபவங்களைக் கடந்து, அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருக்கும், என் அம்மாவுக்கும், என் குடும்பத்தின் மற்றவர்களுக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என அதில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சிக்மா திரைப்படத்தின் பாடல் குறித்து ஜேசன் சஞ்சய் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Crafted in style to leave a mark. ⚡️ Step behind the scenes of #SigmaStyle from #SIGMA 🔥
Tamil 🔗 https://t.co/IoLEPBQ9m9
Telugu 🔗 https://t.co/P2bFPKEFgM #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram #SampathRaj @shivpanditt… pic.twitter.com/LHtEnQdves— Jason Sanjay Official (@official_jsj) June 9, 2026
சிக்மா படமானது ஆரம்பத்தில் ஜூலை 31ல் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், பின் ஜன நாயகன் படத்தின் ரிலீஸினால் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு பின் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.