Thirupaachi: ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜய் – திரிஷாவின் திருப்பாச்சி.. எப்போது தெரியுமா?
Thirupaachi Re-release: தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் தளபதி விஜய். இவர் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் 2005ம் ஆண்டில் நடித்த படம் திருப்பாச்சி. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை கடந்த நிலையில், 2026ம் ஆண்டில் ரீ- ரிலீஸ் செய்யப்படுவதாக தேதி அறிவிக்கப்பட்டது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு தொடக்கங்களில் புகப்பெற்ற இயக்குநராக இருந்தவர் பேரரசு (Perarasu). இவரின் இயக்கத்தில் முதல்வர் விஜய் (CM Vijay) மற்றும் அஜித் குமார் (Ajith Kumar) போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் இவருக்கு சினிமாவில் அறிமுக திரைப்படமாக அமைந்தது திருப்பாச்சி (Thirupaachi). முதல்வர் விஜய்யின் நடிப்பில் இந்த் படமானது 2005ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படமானது அண்ணன் தங்கையின் பாசம் மற்றும் தங்கைக்காக அண்ணன் செய்யும் விஷயங்களை மையமாக கொண்ட படமாக அமைந்தது. இதில் விஜய், திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) மற்றும் மல்லிகா (Mallika) போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். இப்படம் 2005ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான ஹிட்டடித்தது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை கடந்த நிலையில், 2026ம் ஆண்டில் ரீ- ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: சேயோன் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்? வைரலாகும் தகவல்
எப்போது ரீ-ரிலீஸாகிறது தளபதி விஜய்யின் திருப்பாச்சி திரைப்படம்:
இந்த திருப்பாச்சி படமானது இயக்குநர் பேரரசுக்கு முதல் திரைப்படமாகும். இதில் விஜய், பாசமான அண்ணனாகவும் மற்றும் ஆக்ஷன் மன்னனாகவும் நடித்திருந்தார். இப்படம் தளபதி விஜய்யின் வாழ்க்கையில் பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்று, இப்படம் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது தளபதி விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: வேற யாராவது இருந்தால் பிச்சிட்டு ஓடியிருப்பாங்க.. வருங்கால மனைவி சாய் தன்ஷிகா குறித்து புகழ்ந்து பேசிய விஷால்!
திருப்பாச்சி பட ரீ- ரிலீஸ் தேதி குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
The blockbuster #Thirupaachi is back on the big screen in 4K and Dolby 7.1 this October 1st! 🔥
Tamilnadu Theatrical release by : @thirupatipics#ThalapathyVijay #CMVijay #VIjay #ThirupaachiReRelease #Trisha pic.twitter.com/xtMs624xXb
— EE MEDIAWORKS (@eemediaworks) August 8, 2026
தளபதி விஜய் தற்போது முழுவதுமாக சினிமாவிலிருந்து விலகிவிட்டார். தற்போது ச.ஜோசப் விஜயாக, தமிழகத்தின் முதல்வராக பணியாற்றிவருகிறார். இவர் தற்போது அரசியலில் முழுமையாக நுழைந்துவிட்ட நிலையில், இனி படங்களில் நடிக்கமாட்டார். இறுதியாக இவர் நடித்த ஜன நாயகன் படமானது 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் வெளியானது. விஜய் அரசியலில் சென்ற நிலையில், அவர் நடித்திருந்த பழைய படங்கள் இனி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.