AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் படத்தில் அந்த காட்சி விஜய் சாருக்கு ரொம்ப பிடித்தது – இயக்குநர் எச். வினோத் ஓபன் டாக்

H Vinoth talks about Vijays Favorite scene in Jana Nayagan movie | நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் விஜய்க்கு ரொம்ப பிடித்த காட்சி குறித்து இயக்குநர் பேசியது வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படத்தில் அந்த காட்சி விஜய் சாருக்கு ரொம்ப பிடித்தது – இயக்குநர் எச். வினோத் ஓபன் டாக்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Aug 2026 07:00 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகானாக வலம் வந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் தளபதி விஜயை கொண்டாடிய மக்கள் தற்போது சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் தளபதி விஜயின் கட்சியை வெற்றிபெறச் செய்து அவரை முதலைச்சராக்கி தமிழ் நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி விஜய் முதலமைச்சராக ஆவதற்கு முன்பு தான் இறுதியாக நடிக்கும் படம் என்று அவர் வெளிப்படையாக கூறி இருந்தார் ஜன நாயகன் படத்தை. இந்தப் படத்தை இயக்குநர் எச் வினோத் எழுதி இயக்கி இருந்தார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெங்கர் நாராயணன் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னதாகவே முடிவடைந்து இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தொடர்ந்து வெளியாகாமல் இருந்தது.

பல பிரச்சனைகளைத் தாண்டி இந்தப்படம் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்தப் படம் குறித்து இயக்குநர் எச். வினோத் பேட்டிகளிலும் விழாக்களிலும் பேசியது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தளபதி விஜய்க்கு பிடித்த காட்சி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படத்தில் அந்த காட்சி விஜய் சாருக்கு ரொம்ப பிடித்தது:

ஜன நாயகன் படத்தில் குட் டச், பேட் டச் காட்சியை விஜய் சார் மிகவும் விரும்பினார். ‘பகவந்த் கேசரி’ படத்தை ரீமேக் செய்ய அவர் விரும்பியதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. அந்தக் காட்சியை விஜய் சார் நடிக்கும்போது, ​​அசல் படத்துடனான ஒப்பீடு தவிர்க்க முடியாததாகிறது. நந்தமுரி பாலகிருஷ்ணா சார் மற்றும் விஜய் சார் ஆகிய இருவரில், விஜய் சார் அந்தக் காட்சியை மிகவும் இயல்பாகவும் மனதிலிருந்தும் வெளிப்படுத்தினார். படத்தொகுப்பின்போது, ​​அவர் அந்தக் காட்சியில் கொண்டு வந்த உணர்வை எங்களால் உண்மையாகவே உணர முடிந்தது என்று இயக்குநர் எச். வினோத் தெரிவித்து இருந்தார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மூடர் கூடம் 2 படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஸ்கூல் படிக்கும் போது எனக்கு இங்கிலீஸ் தெரியாது… ஆனால் – நடிகர் தனுஷ் பேச்சு

Follow Us