AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ட்ரெய்ன் படத்தின் ரிலீஸ் தாமதமாக இதுதான் காரணம் – நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi talks about train movie delay | பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ட்ரெய்ன் படத்தின் ரிலீஸ் தாமதமாக இதுதான் காரணம் – நடிகர் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Aug 2026 14:46 PM IST

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த 1996-ம் ஆண்டு சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய் சேதுபதி தொடர்ந்து 2010-ம் ஆண்டு வரை சின்ன சின்ன வேடங்களிலேயே நடித்து வந்தார். தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாம மட்டுமின்றி அவ்வபோது வில்லன் வேடங்களிலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றார். தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் நடிகர் விஜய் சேதிபதி அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் அடுத்தடுத்து 5 படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்தப் படங்கள் மூன்று மற்றும் கேமியோ வேடத்தில் நடித்தப் படங்கள் இரண்டு என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ட்ரெய்ன் படத்தின் ரிலீஸ் தாமதமாக இதுதான் காரணம்:

அந்தப் பேட்டியில் விஜய் சேதுபதி பேசியதாவது, ட்ரெய்ன் படத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே முடித்துவிட்டேன். ஆனால் சில வணிகரீதியான காரணங்களால் அதன் வெளியீடு தாமதமானது. ஸ்லம் டாக் 33 டெம்பில் ரோட் படமும் முடிந்துவிட்டது, அதற்கான வணிகரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பக்தா படத்திற்கான டப்பிங் பணிகள் நடக்கின்றன. பாக்கெட் நாவல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது, அதேவேளையில் மணிரத்னம் அவர்களின் படத்திலும் நான் பணியாற்றத் தொடங்கிவிட்டேன்.

பொதுவாக நான் எனது படங்களின் வெளியீட்டிற்கு இடையே இடைவெளி இருக்குமாறு திட்டமிடுவேன். ஆனால், படங்கள் சரியான நேரத்தில் வெளியாகாததால், பல படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளியாவது போலத் தோன்றலாம். நான் மிகச் சாதாரண நிலையிலிருந்து வந்தவன். “மக்கள் என்னை விரும்பாமல் போனால், எனக்கு வேலை இல்லாமல் போய்விடுமோ?” என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் உண்டு.

Also Read… டாக்ஸிக் படத்திற்கு எதிரான கருத்துகள்… நடிகை ஹூமா குரேசி பேச்சு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வெளியானது ஜீவாவின் தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Follow Us