AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெளியானது ஜீவாவின் தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Thagappan Movie First Look Poster Released Now | நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வெளியானது ஜீவாவின் தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
தகப்பன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Aug 2026 17:42 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் காமெடி காட்சிகள் நிறைந்து மக்களை மகிழ்விக்கும் வகையில் இருப்பதால் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ஜீவா அவ்வபோது பான் இந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் ஜீவா இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தமிழ் மொழியில் நாயகனாக ஒரு படத்திலும் தெலுங்கு சினிமாவில் நீண்ட கேமியோ ரோலில் ஒரு படத்தில் நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜாலியா இருந்த ஒருத்தன் என்ற படத்தில் நடித்து முடித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களின் அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வெளியானது ஜீவாவின் தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:

இந்த நிலையில் நடிகர் ஜீவாவின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தகப்பன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சிறுவன் மற்றும் அவரது தந்தை உள்ளது போல அந்த போஸ்டர் உள்ளது. அதில் நடிகர் ஜீவா தனது மகனுடன் இருப்பது போல காட்டப்பட்டுள்ள நிலையில் இவர்களைச் சுற்றியே இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… அப்போ அரசன் படம் தீபாவளி ரிலீஸ் இல்லையா? வைரலாகும் புது தகவல்

நடிகர் ஜீவா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரியோ ராஜின் ராம் இன் லீலா படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

Follow Us