கார்த்தியின் 30வது படத்தில் இசையமைப்பாளராக இணைந்த தேவி ஸ்ரீ பிரசாத் – வெளியான அறிவிப்பு!
DSP to Compose for Karthis 30th Film: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக இருந்துவருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் இன்று (02/08/2026) தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி நடிக்கும் 30வது படத்தில் அவர் இணைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து அசத்திவருபவர் கார்த்தி (Karthi). இவர் தமிழ் சினிமாவை அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் சில படங்களிலும் கேமியோ வேடங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரே தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் கல்யாண் சங்கர் (Kalyan Shankar) இயக்க, சூர்யாவின் (Suriya) விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and sons) படத்தை தயாரித்திருந்த சித்தாரா எண்டெர்டைமென்ட் நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படமானது சிறப்பாக கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், அதில் கார்த்தி நடித்துவருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி (Meenakshi Chaudhary) ஜோடியாக நடித்துவருகிறார்.
கார்த்தி நேரடியாக நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்ற நிலையில், அதன் மீது ஆர்வம் அதிகமாகியுள்ளது. அந்த வகையில், இப்படத்தில் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad) இணைந்துள்ளாராம். இன்று ஆகஸ்ட் 02ம் தேதியில், தனது பிறந்தநாளை தேவி ஸ்ரீ பிரசாத் கொண்டாடிவரும் நிலையில், படக்குழு கார்த்தியின் 30வது படத்தில் அவர் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: கேமியோ பண்றதே நிப்பாட்டிட்டேன்… ஜெயிலர் 2ல் நடிக்க காரணம் இதுதான் – விஜய் சேதுபதி பேச்சு!
கார்த்தியின் 30வது படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்தது குறித்து படக்குழு வெளியிட்டஎக்ஸ் பதிவு:
The Rockstar joins the ride ❤️🔥
Welcome aboard @ThisIsDSP 🔥Wishing a very Happy Birthday to our Music Director. Looking forward to creating madness together 😎
– Team #Karthi30 pic.twitter.com/8llgNjjpma
— Sithara Entertainments (@SitharaEnts) August 2, 2026
கார்த்தி மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணி படங்கள்:
கார்த்தி மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் கூட்டணியில் இதுவரை சினிமாவில் பல படங்கள் உருவாகியுள்ளது. 2013ம் ஆண்டில் வெளியான அலெக்ஸ் பாண்டியன், 2011ல் வெளியான சிறுத்தை மற்றும் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் பணியாற்றியிருந்தார். இதையடுத்து தற்போது காந்தியின் 30வது படத்தில் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரீசென்ட் லுக்!
கார்த்தியின் 30வது படத்தின் இயக்குநர் யார்:
கார்த்தி நடிப்பில் முதல் முறையாக நேரடியாக தெலுங்கு படமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, அவருடன் மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்துவருகிறார். இப்படத்தை இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்க, நாகா வம்சி தயாரித்துவருகிறார். இயக்குநர் கல்யாண் சங்கர் ஏற்கனவே தெலுங்கில் Mad மற்றும் Mad 2 போன்ற படங்களையோ இயக்கி ஹிட் கொடுத்தவர். தற்போது கார்த்தியுடன் புது படங்களில் இணைந்துள்ளார்.