AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கார்த்தியின் 30-வது படத்தை தயாரிக்கும் சூர்யா பட தயாரிப்பு நிறுவனம் – வைரலாகும் அப்டேட்

Actor Karthis 30th Film Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி தற்போது தெலுங்கு சினிமா இயக்குநருடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

கார்த்தியின் 30-வது படத்தை தயாரிக்கும் சூர்யா பட தயாரிப்பு நிறுவனம் – வைரலாகும் அப்டேட்
கார்த்தி 30-வது பட விழாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 May 2026 14:48 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களான சிவக்குமாரின் இளைய மகனாகவும் நடிகர் சூர்யாவின் தம்பியாகவும் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் நடிகர் கார்த்தி. ஆரம்ப காலக்கட்டத்தில் நடிகர் கார்த்தி சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் தான் நுழைந்தார். ஆனால் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த போது அதனை விட்டுவிடாமல் நடிக்கத் தொடங்கினார் கார்த்தி. அதன்படி அவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமே நடிகர் கார்த்திக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது  குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் இன்று நடிகர் கார்த்தி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது நடிப்பில் உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கார்த்தியின் 30-வது படத்தை தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்:

அதன்படி தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள 30-வது படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னதாக சினிமா வட்டாரங்களில் வைரலாகி வந்த தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள கல்யாண் சங்கர் நடிகர் கார்த்தியின் 30-வது படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்தை தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கின்றது. இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பெத்தி படத்திலிருந்து இன்று வெளியாகிறது ஹெல்லல்லல்லோ சிங்கிள் வீடியோ

Follow Us