கருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து புது படங்களுக்கு கதை கேட்கும் சூர்யா… வைரலாகும் தகவல்
Suriya has started listening to new scripts actively | நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான கருப்பு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களுக்கு கதை கேட்கும் பணிகளை சூர்யா தீவிரப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் 45-வது படமாக கடந்த 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி வில்லனாக நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் நேற்று வரை ரூபாய் 207 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பல சிக்கல்களை தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது இந்தப் படம் வெற்றியடையுமா இல்லையா என்ற சந்தேகம் சினிமா வட்டாரங்களில் நிலவி வந்த நிலையில் அந்த சந்தேகங்கள் எல்லாம் சுக்குநூறாகும் வகையில் படம் மாபெரும் வெற்றியைப் பெற்று வருகின்றது. இது சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 47 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட் வைரலாகி வருகின்றது.




கருப்பு பட வெற்றியை தொடர்ந்து படங்களுக்கு கதை கேட்கும் சூர்யா:
‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, சூர்யா புதிய கதைக்களங்களை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இயக்குநர்கள் டி. ஜே. ஞானவேல் மற்றும் பா. ரஞ்சித் ஆகியோர் அவரது வரவிருக்கும் படங்களை இயக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சூர்யாவின் 48-வது படத்தை டி. ஜே. ஞானவேல் மற்றும் சூர்யாவின் 49-வது படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது.
Also Read… Karthi: ரவி ஷூட்டிங்கில் எப்போதுமே அப்டித்தான்.. கலகலப்பாக கார்த்தி சொன்ன விஷயம்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
After the massive success of #Karuppu, it is said that #Suriya has started listening to new scripts actively. Reports also suggest that directors T. J. Gnanavel and Pa. Ranjith are likely to direct his upcoming projects.#VishvanathAndSons — Venky Atluri#Suriya47 — Jithu… pic.twitter.com/AqHR6dhFWt
— Movie Tamil (@_MovieTamil) May 22, 2026
Also Read… தீபாவளியை குறி வைக்கும் சிலம்பரசனின் அரசன் படக்குழு… வைரலாகு ரிலீஸ் அப்டேட்!