நடிகர் முத்துக்காளையின் மனைவி சிகிச்சை பலனின்றி மரணம் – அதிர்ச்சி தகவல்
நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே 18, 2026 அன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்கு உதவக்கோரி முதலமைச்சர் விஜய்க்கு, முத்துக்காளை வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே 18, 2026 அன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்கு உதவக்கோரி முதல்வர் விஜய்க்கு, முத்துக்காளை வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சந்தித்து மேல் சிகிச்சைக்காக உதவுவதாக உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
நடிகர் முத்துக்காளையின் மனைவி சிகிச்சை பலனின்றி மரணம்
நடிகர் முத்துக்காளை தனது மனைவியின் மேல் சிகிச்சைக்காக உதவுமாறு முதல்வர் ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் அவரை நேரில் சந்தித்து சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். மேலும் சிகிச்சைக்கு உதவுவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் தான் முத்துக்காளையின் மனைவி இன்று உயிரிழந்துள்ளார்.
இதையும் படிக்க : ராஜ்மோகனின் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்த விஷால்… ஆதரவு குரல் கொடுக்கும் கோலிவுட் பிரபலங்கள்!
முத்துக்காளையின் மனைவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அங்கு அவருக்கு தலையில் ரத்தக்கசிவு பிரச்னை இருப்பதை அறிந்து அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 19 நாட்களாக அவர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் தரப்பில் சொல்ல, அதற்காக பண உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் மனைவியின் இறந்த உடலை பார்த்து அவர் கண்ணீர் வடித்த காட்சிகள் காண்போரை நெகிழ செய்தது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவ காமெடி நடிப்பால் ரசிகர்களிடையே பிரபலமானவர் முத்துக்காளை. இவர் ஏராளமான வடிவேலு, விவேக் காமெடி காட்சிகளில் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அடிப்படையில் தற்காப்பு கலைகளில் ஆர்வமிக்கவரான இவர் திரைப்படங்களில் சண்டைபயிற்சி இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்திருக்கிறார். ஆரம்பகட்டத்தில் ஸ்டண்ட் சிவாவின் உதவியாளராக பணியாற்றி வந்திருக்கிறார்.
இதையும் படிக்க : திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை – பரபரப்பு தகவல்
அப்போது பொன்மனம் என்ற படத்தில் காமெடி காட்சிகளில் நடிக்க அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவருக்கு காமெடி வேடங்கள் கிடைக்கத் தொடங்கின. செத்து செத்து விளையாடுவோமோ, சிக்கன் 65 என வடிவேலுவுடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் இந்த நிலையில் அவரது மனைவியின் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.