AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை – பரபரப்பு தகவல்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குத்திது தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை  – பரபரப்பு தகவல்
தயாரிப்பாளர் கே.ராஜன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 May 2026 18:45 PM IST

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குத்திது தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை

கடந்த 1983 ஆம் ஆண்டு பிரம்மச்சாரிகள் என்ற படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கே.ராஜன்.  பிரபு தேவா நடித்துள்ள டபுள்ஸ், அவள் பாவம், நினைக்காத நாளில்லை உள்ளிட்ட படங்களையும் அவர் தயாரித்துள்ளார். மேலும், நம்ம ஊரு மாரியம்மா, உணர்ச்சிகள் ஆகிய படங்களை இயக்கவும் செய்துள்ளார். மேலும் நடிகராக கபடி கபடி, பாம்பு சட்டை, அஜித்தின் துணிவு, பகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிக்க : ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது – விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

86 வயதாகும் கே.ராஜன் தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறார்.  சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகவும் தயாரிப்பாளர் கே.ராஜன் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட விழாக்கள் மற்றும் பேட்டிகளின் மூலம் தான் ரசிகர்களிடையே மிகவும் அதிகம் பிரபலம். அவர் தெரிவிக்கும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையாகி வருவது வழக்கம். பல திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களில் இவர் வெளியிடும் சர்ச்சை கருத்துகளால் அந்த படங்களுக்கு மறைமுக விளம்பரமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : அவர் சிஎம் ஆகியிருந்தால்… ரஜினியின் பேச்சுக்கு கமல் கொடுத்த ரியாக்ஷன்

இந்த நிலையில் மே 17 , 2026 அன்று காரில் சென்று கொண்டிருந்தவர் அடையாறு கூவம் ஆற்றுப்பாலத்தில் காரை நிறுத்த சொல்லி, பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் தீயணைப்புதுறையினர் உதவியுடன் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதனையடுத்து திரையுலகினர் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

Follow Us