AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது – விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

Actor Vishal X Post : தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று புதிய அமைச்சரவையை உருவாகி உள்ளார் தளபதி விஜய். இதில் ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது என்று நடிகர் விஷால் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது – விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
விஷால் மற்றும் அமைச்சர் ராஜ் மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 May 2026 14:58 PM IST

தமிழ் சினிமாவில் மக்கள் மனதை கவர்ந்து உச்ச நடிகராக வலம் வந்த தளபதி விஜய் தற்போது தமிழ் நாட்டின் அரசியலிலும் மக்களின் மனதை கவர்ந்து தமிழ் நாட்டின் முதமைச்சராக பதவி ஏற்றுள்ளார். அதன்படி நடந்து முடிந்த 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் நடிகர் தளபதி விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் சார்பாக போட்டியிட்டார். தமிழக சட்டமன்ற தொகுதிகளில் அதிக அளவில் வெற்றிப் பெற்று பெரும்பான்மையை நிரூபித்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார் தளபதி விஜய். தொடர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு பலரும் அவருக்கு வாழ்த்துகளையும் அறிவுறைகளையும் வழங்கி வருகின்றனர். மேலும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற பலரை தேர்வு செய்து அமைச்சரவையிலும் அமர வைத்துள்ளார் தளபதி விஜய்.

தொடர்ந்து ஒவ்வொரு துறைக்கும் அமைச்சரை தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். அதில் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராக ராஜ் மோகனை தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ள நடிகர் விஷால் ராஜ் மோகனை அமைச்சராக தேர்ந்தெடுத்தது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்மோகன் திரைப்பட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது:

அந்தப் பதிவில் விஷால் கூறியதாவது, வெற்றிப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சர்களாக்குவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது. பெரும் நஷ்டத்தில் இருக்கும் சினிமா துறையை தூக்கி விடுவதற்கு அடிமட்டத்திலிருந்து இந்தத் துறையின் ஒரு அங்கமாக இருந்து, கடந்த 30 ஆண்டுகளாக இந்தத் துறையின் ஒரு பகுதியாக இருக்கும் நமது முதலமைச்சரை விட இந்த துறையை சரியாக கவனித்துக்கொள்ளும் ஒரு நபர் இருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read… விஜய் குறித்து ரசிகர் பேசியபோது த்ரிஷா கொடுத்த ரியாக்‌ஷன் – வைரலாகும் வீடியோ

நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சங்க நிர்வாகிகள்

Follow Us