வெறும் ரூ.45,490-க்கு கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 16.. குரோமா சேலில் ஜாக்பாட்!
iPhone 16 Croma Sale | குரோமா தனது பிளாக் பிரைடே சேலை நடத்தி வருகிறது. இந்த சேலில் ஆப்பிள் ஐபோன் 16-க்கு அசத்தல் தள்ளுபடி வழங்குகிறது. அதாவது, அந்த ஸ்மார்ட்போனை ரூ.50,000-க்கு வழங்குகிறது. இந்த சலுகை குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் பல்வேறு ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்கள் பல அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தாலும், பலருக்கும் ஐபோன் (iPhone) வாங்க வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும். ஆனால், பலரையும் ஐபோனை வாங்க விடாமல் செய்வது அதன் விலை தான். ஆனால், தற்போது அந்த கவலை தேவையில்லை. காரணம், குரோமா சேலில் (Croma Sale) ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16) வெறும் ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், குரோமா சேலில் ஆப்பிள் ஐபோன் 16-ஐ வெறும் ரூ.45,000-க்கு வாங்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 16-க்கு குரோமா சேலில் அசத்தல் தள்ளுபடி
ஐபோன்களின் விலை எப்போதுமே மற்ற ஸ்மார்ட்போன்களை விடவும் சற்று அதிகமாக தான் இருக்கும். அதிலும் தற்போது மெமரி சிப்களின் பற்றாக்குறை காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. எனவே, ஐபோன்கள் சாமானிய மக்களுக்கு எட்டா கனியாக மாறியுள்ளது. இந்த நிலையில் தான், ஆப்பிள் ஐபோன் 16-ஐ ரூ.50,000-க்கு கீழ் வாங்கும் வாய்ப்பு பொதுமக்களுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க : இனி வாட்ஸ்அப்பில் இப்படி புகைப்படம், வீடியோக்களை அனுப்பலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!
வெறும் ரூ.45,490-க்கு கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 16
குரோமா தனது பிளாக் ஃபிரைடே (Croma Black Friday Sale) சேலை நவம்பர் 26, 2026 முதல் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த சேல் நவம்பர் 30, 2026 உடன் நிறைவடைய உள்ளது. இந்த சேலில் தான் ஆப்பிள் ஐபோன் 16-க்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, இந்த சேலில் ஆப்பிள் ஐபோன் 16-ஐ வெறும் ரூ.45,490-க்கு வாங்கிக்கொள்ளலாம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குரோமா தானது பிளாக் ஃபிரைடே சேலில் பழைய ஆப்பிள் ஐபோன்களை எக்ஸ்சேஞ் செய்ய ரூ.24,000 வரை வழங்குகிறது.
இதையும் படிங்க : உங்கள் மொபைல் ஹேக் ஆகிவிட்டதா?.. உடனே இவற்றை செய்யுங்கள்!
இந்த விலைக்கு வாங்க இவை அவசியம்
அதுதவிர குரோமா சேலில் ரூ.8,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனசாக வழங்கப்படுகிறது. பிறகு ரூ.2,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இவற்றை அனைத்தையும் பயன்படுத்தும் பட்சத்தில் உங்களால் ஆப்பிள் ஐபோன் 16-ஐ வெறும் ரூ.45,490-க்கு வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் இந்த விலைக்கு ஆப்பிள் ஐபோன் 16-ஐ வாங்குவதற்கு நீங்கள் எந்த மாடல் ஐபோனை எக்ஸ்சேஞ்ச் செய்கிறீர்கள், அதன் மதிப்பு என்ன என்பதை பொருத்தே முடிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



