இனி வாட்ஸ்அப்பில் இப்படி புகைப்படம், வீடியோக்களை அனுப்பலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!
WhatsApp Interactive Sharing | மெட்டா, வாட்ஸ்அப்பில் பல்வேறு புதிய புதிய மற்றும் அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு கேமராக்களையும் பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் அசத்தல் அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் தங்களது தினசரி வாழ்வில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக மெட்டாவின் (Meta), வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. இந்த செயலிக்கு ஏராளமான பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில் தான், தங்களது பயனர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில், அந்த நிறுவனம் பல்வேறு புதிய புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்புவதை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றும் வகையில், ஒரு அட்டகாசமான அம்சத்தை சோதனை செய்து வருகிறது. அது என்ன அம்சம், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி வாட்ஸ்அப்பில் இப்படி புகைப்படம், வீடியோக்களை அனுப்பலாம்
வாட்ஸ்அப், தனது பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மிகவும் சுவாரஸ்யமான முறையில் அனுப்புவதற்கான முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, ஒரு நிகழ்வையோ அல்லது ஒரு நபரையோ நீங்கள் பதிவு செய்யும்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், உங்களது உணர்வு எப்படி உள்ளது என்பதை இந்த அம்சத்தின் மூலம் பதிவு செய்து அனுப்ப முடியும். இத்தகைய அட்டகாசமான அம்சத்தை தான், மெட்டா தற்போது சோதனை செய்து வருகிறது.
இதையும் படிங்க : 4வது முறையாக விலை உயர்த்தும் மாருதி சுசூகி.. சாமானியர்களுக்கு ஷாக்!
இனி நீங்களும் அனைத்து புகைப்படங்களிலும் இருக்கலாம்
தற்போதைய நிலவரப்படி இரண்டு விதங்களாக மட்டுமே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியும். அதாவது, சம்பவத்தை மட்டும் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அனுப்புவது, அல்லது தங்களை தாங்களே புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அனுப்புவது. தற்போதுவரை வாட்ஸ்அப்பில் இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை தான் செய்ய முடிகிறது. இந்த நிலையில் தான், ஒரே நேரத்தில் இரண்டையும் செய்யும் அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை வாட்ஸ்அப் கையில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க : வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை! ரகசிய தகவல்களைப் பகிர வேண்டாம் – வெப் லாகின் மூலம் மோசடி அபாயம்
எப்போது அறிமுகம் செய்யப்படும்?
இந்த அட்டகாசமான அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கி சோதனை மேற்கொண்டு வருகிறது. சோதனைகள் நிறைவு பெற்று, அம்சம் முழு வடிவம் பெற்ற பிறகு அது மிக விரைவில் அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அட்டகாசமான அம்சத்திற்கு பல்வேறு பயனர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.