AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தபோதும் நான் நல்ல துணை கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்தேன் – நடிகர் ரிஷிகாந்த்!

Actor Rishikanth Recent Interview | தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் ரிஷிகாந்த். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நாயகனாக நடிப்பது குறித்தும் துணைக் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது குறித்தும் வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.

கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தபோதும் நான் நல்ல துணை கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்தேன் – நடிகர் ரிஷிகாந்த்!
நடிகர் ரிஷிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Nov 2026 12:39 PM IST

தமிழ் சினிமாவில் பெஞ்ச் டால்கீஸ் என்ற ஆந்தாலஜி படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் ரிஷிகாந்த் (Actor Rishikanth). சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பல குறும்பங்களில் நடித்துள்ளார் நடிகர் ரிஷிகாந்த். அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்து உள்ளார் நடிகர் ரிஷிகாந்த். இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் கடந்த சில படங்களில் தான் நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி இறுதியாக நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் தமிழ் மொழியில் வெளியானது டோரதி.

இந்தப் படத்தில் ரிஷிகாந்தின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் ரிஷிகாந்த் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாயகனாக வாய்ப்பு இருந்தும் துணை கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்தேன்:

அதன்படி இந்தப் பேட்டியில் ரிஷிகாந்த் பேசியதாவது, நான் திரைப்படத்துறைக்குள் நுழைந்தபோது, ​​கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்காமல், ஏன் சிறிய வேடங்களில் நடிக்கிறேன் என்று பலரும் என்னிடம் கேட்பார்கள். ஆனால், முதலில் நான் என் திறமையை நிரூபிக்க விரும்பினேன். கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தபோதும், நான் நல்ல துணை கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்தேன். சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது.

கதாநாயகனாக நடித்தது, இந்தத் துறையில் என்னால் நிலைத்து நிற்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது. ஆரம்பத்தில், என்னால் ஒரு முழு திரைப்படத்தைத் தாங்கிச் செல்ல முடியுமா என்ற சந்தேகம் இருந்தது; ஆனால் இப்போது என்னால் முடியும் என்று எனக்குத் தெரியும். துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, இருப்பினும் கதாநாயகனாக நடிப்பது கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. ஏனெனில், அதில் தனித்துவமான சவால்களும் அச்சங்களும் அடங்கியுள்ளன.

இந்த வெற்றி, ரசிகர்கள் எனது முந்தைய திரைப்படங்களையும் குறும்படங்களையும் மீண்டும் தேடிப் பார்க்கத் தூண்டியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. முன்னதாக, அந்தப் படைப்புகள் ஏன் அதிக மக்களைச் சென்றடையவில்லை என்று நான் வியந்திருக்கிறேன். ஆனால் இப்போது ரசிகர்கள் அவற்றைக் கண்டறிந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், எனது குறும்படக் காலக்கட்டத்தில் நான் இணைந்து பணியாற்றியவர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அன்று, நான் கதாநாயகனாகவும், அவர்கள் இயக்குநர்களாகவும் மாறும்போது மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என்று நாங்கள் ஒருவருக்கொருவர் வாக்குறுதி அளித்திருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… அதை நாகரீகமாக புரிந்துகொள்ள இங்க யாருமில்ல.. அரசியல் குறித்து பேசிய விஜய் சேதுபதி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அப்பாவ ரொம்ப மிஸ் பண்ணுறேன்.. பிக் பாஸில் எமோஷனலான டிடிஃஎப் வாசனின் குடும்பம்! – ப்ரோமோ இதோ!

Follow Us