AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனது அடுத்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்த பேசில் ஜோசஃப் – வைரலாகும் வீடியோ

Basil Joseph | மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் பேசில் ஜோசஃப். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது அடுத்தப் படத்திற்கான பணிகள் மற்றும் அந்தப் படம் எப்போது தொடங்கும் என்பது குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளது வைரலாகி வருகின்றது.

தனது அடுத்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்த பேசில் ஜோசஃப் – வைரலாகும் வீடியோ
பேசில் ஜோசப்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Nov 2026 11:25 AM IST

மலையாள சினிமாவில் நாயகனாகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் பேசில் ஜோசப் (Basil Joseph). இவர் மலையாள சினிமாவில் பன்முகத் தன்மை கொண்ட வினித் ஸ்ரீனிவாசனிடம் உதவி இயக்குநராக தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து உதவி இயக்குநராக பணியாற்றும் போதே படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் மலையாள சினிமாவில் வெளியான படங்கள் ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் தொடர்ந்து நடிகர் பேசில் ஜோசப் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் மட்டும் இன்றி நடிப்பில் வெளியாகும் படங்கள் மலையாள சினிமா ரசிகரக்ளிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தொடர்ந்து பிசியாக வலம் வரும் பேசில் ஜோசப் தற்போது கடந்த சில ஆண்டுகளாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த பேசில் ஜோசப் தற்போது அடுத்ததாக இயக்க உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தனது அடுத்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்த பேசில் ஜோசஃப்:

மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்டை பேசில் ஜோசப் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி பேசில் ஜோசப் அந்தப் பேட்டியில் பேசியதாவது, பேசில் ஜோசப் தான் தற்போது ஒரு புதிய திட்டத்தில் பணியாற்றி வருவதாகவும், அது அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் திட்டம் இந்தி மொழியில் இல்லை என்று அவர் குறிப்பால் உணர்த்திய அதே வேளையில், அது குறித்த கூடுதல் விவரங்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளார். மேலும் இது அவர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்க உள்ள படம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஹாரர் த்ரில்லர் பாணியில் நாக சைத்தன்யா நடிப்பில் வெளியானது வ்ருஷகர்மா பட ட்ரெய்லர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த டிடிஎஃப் வாசனின் மனைவி மற்றும் அம்மா… வைரலாகும் வீடியோ!

Follow Us