இணையத்தில் கவனம் ஈர்க்கும் மூன்வால்க் படத்தின் ட்ரெய்லர்!
Moonwalks Movie Trailer Out Now | தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் பிரபு தேவா நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் மூன் வால்க். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே இணையத்தில் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபலமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிரபு தேவா (Prabhu Deva). இவர் நடன இயக்குநராக படங்களில் அதிக அளவில் பணியாற்றுவதற்கு முன்பாகவே நாயகனாக தமிழ் சினிமவில் பலப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக ஹிட் அடித்து வந்த நடிகர் பிரபு தேவா நடன இயக்குநராக மற்ற நாயகன்களின் படங்களில் பான் இந்திய அளவில் பணியாற்றி வருகிறார். அது மட்டும் இன்றி தொடர்ந்து இயக்குநராக மற்ற நடிகர்களை வைத்து படங்களையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியாக வலம் வரும் இவர் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து உள்ள படம் மூன் வால்க்.
இந்த மூன் வால்க் படத்தை இயக்குநர் மனோஜ் என் எஸ் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்தில் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய காமெடி நடிகர்கள் இணைந்து நடித்து உள்ளது படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றது.




இணையத்தில் கவனம் ஈர்க்கும் மூன்வால்க் படத்தின் ட்ரெய்லர்:
இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி டிசம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த மூன்வால்க் படத்தில் நடிகர் பிரபு தேவா உடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சதீஷ் குமார், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், ரெடின் கிங்ஸ்லி, தீபா சங்கர், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் & ராம்குமார் நடராஜன் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… இந்த உலகத்துல நான் தான் லக்கியஸ்ட் பர்சன்… பிக்பாஸில் எமோஷ்னலாக பேசிய தன்யா – வைரலாகும் வீடியோ!
யோகி பாபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
MOONWALK TRAILER OUT NOW
Tamil: https://t.co/ahNkOLbBCa
Telugu: https://t.co/RyF14eoEYl
Hindi: https://t.co/yKDhj4WvX4Moonwalk – A family comedy entertainer releasing
worldwide theatrical on December 24!“Naalu Peru Santhoshama Sirikkaraanganna, Edhuvum Thappilla” 😄
#FamilyLaughter #HolidayLaughter
AR Rahman & Prabhudeva together after 30 years!
Starring @PDdancing @iYogiBabu @AjuVarghesee #ArjunAshokan @Satzsathish321
Music @arrahman
Directed by #ManojNirmalaSreedharan
Produced by #ManojNirmalaSreedharan #DivyaManoj and @praveenelak @behindwoods
DOP @Anoopvshylaja@NishmaChengapp5 #SushmithaNayak #MottaiRajendran @KingsleyReddin #LolluSabhaSwaminathan #DeepaShankar #DrSanthoshJacob #RamkumarNatarajan #Sekhar #PiyushShazia @Lyricist_Vivek @arivubeing #VishnuEdavan #VigneshRamakrishna #SathyanIlanko @doublejtherapp @tamilankallar #ShanooMuralidharan #SwethaRajuu #DivyaGeorge #Macguffin #SyncCinema #KannanGanpat #Srivfx #Pixstone #Madhanagopal @I_MediaMatte @LahariMusic @Romeopictures_ @mynameisraahul @teamaimpr
— Yogi Babu (@iYogiBabu) November 27, 2026
Also Read… பவர் ஹவுஸ் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் கூட்டணி வைக்க உள்ளது யாருடன் தெரியுமா? வைரலாகும் தகவல்!