AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோவர்த்தன கிரிவலம் சென்ற அனந்த் அம்பானி.. பிருந்தாவனத்தில் உற்சாக வரவேற்பு!

ரிலையன்ஸ் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி, உத்தரப் பிரதேசத்தின் பிருந்தாவனத்தில் கோவர்த்தன மலையைச் சுற்றி கிரிவலம் மேற்கொண்டார். முன்னதாக கோயிலில் வழிபட்ட அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாத்தா, பாட்டியின் ஆசீர்வாதத்தால் கிரிவலம் மேற்கொள்வதாகவும், இந்தியா நலமாக இருக்க வேண்டியதாகவும் தெரிவித்தார்.

கோவர்த்தன கிரிவலம் சென்ற அனந்த் அம்பானி.. பிருந்தாவனத்தில் உற்சாக வரவேற்பு!
கோவர்த்தன கிரிவலம் சென்ற அனந்த் அம்பானி..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Nov 2026 10:47 AM IST

நவம்பர் 28, 2026: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி, கோவர்த்தன மலையைச் சுற்றி கிரிவலம் செல்லும் புனித நிகழ்வில் பங்கேற்பதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனத்திற்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தார். அவருக்கு வழிநெடுகிலும் பக்தர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோயிலில் சிறப்பு வழிபாடு!

பிருந்தாவனத்திற்கு வந்த அனந்த் அம்பானி முதலில் ஸ்ரீ கிரிராஜ் ஜி முகாரவிந்த் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். தொடர்ந்து கிரிராஜ் ஜி என அழைக்கப்படும் கோவர்த்தன மலையைச் சுற்றி கிரிவலம் மேற்கொண்டார்.

அப்போது பிரஜ் பகுதியின் பாரம்பரிய முறைப்படி பக்தர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் உள்ளூர் கலைஞர்கள் கிருஷ்ணரின் லீலைகளைத் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டினர். அப்பகுதியின் ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு அனந்த் அம்பானி நெகிழ்ச்சியடைந்தார்.

தாத்தா, பாட்டியின் ஆசீர்வாதத்தால் கிரிவலம்!

இதுகுறித்து அனந்த் அம்பானி கூறுகையில், “கிரிராஜ் தரணின் முழுமையான கிரிவலத்தை மேற்கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பிரஜ் மக்களின் அன்புக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். இன்று நான் இங்கு வந்திருப்பதற்கு எனது தாத்தா, பாட்டிதான் காரணம். அவர்களின் ஆசீர்வாதமும் அன்பும் அவர்கள் காட்டிய வழியும்தான் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது.

நான் முழுமையான கிரிவலம் செல்லப்போவதாகக் கூறியபோது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்களின் சார்பாகவும் இறைவனிடம் எனது வேண்டுதல்களை நிறைவேற்றுகிறேன். இங்கு கிடைத்த ஆன்மிக அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், நமது இந்தியா சிறந்து விளங்க வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிக்கொண்டேன்” என்றார்.

குடும்பத்திற்காக அர்ச்சகர் சிறப்பு பிரார்த்தனை

இதுகுறித்து ஸ்ரீ கிரிராஜ் ஜி முகாரவிந்த் கோயில் அர்ச்சகர் கணேஷ் கூறுகையில், அனந்த் அம்பானி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், அனந்த் அம்பானியின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோருக்கும் கிரிராஜ் ஜி மீது நீண்டகால பக்தி இருப்பதாகவும், அவர்கள் இங்குள்ள கோயில்களுக்கு தொடர்ந்து நன்கொடைகள் மற்றும் காணிக்கைகள் வழங்கி வருவதாகவும் கூறினார். அனந்த் அம்பானியின் குடும்பத்தினர் தொடர்ந்து நல்ல பெயரும், செல்வச் செழிப்பும் பெற்று வாழ வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow Us