ஹாரர் த்ரில்லர் பாணியில் நாக சைத்தன்யா நடிப்பில் வெளியானது வ்ருஷகர்மா பட ட்ரெய்லர்!
Vrushakarma Movie Official Trailer | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நாக சைத்தன்யா. இவரது நடிப்பில் ஹாரர் த்ரில்லர் பாணியில் தற்போது உருவாகி உள்ள வ்ருஷகர்மா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நாக சைத்தன்யா (Naga Chaitanya). இவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். வாரிசு நடிகராக இருந்ததால் இவருக்கு வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும் தொடர்ந்து தனது கடின உழைப்பின் காரணமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் நடிகர் நாக சைத்தன்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தண்டேல்.
கடந்த 2025-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான இந்தப் படம் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நாக சைத்தன்யா நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட பாணியில் உருவாகி உள்ளது வ்ருஷகர்மா.




ஹாரர் த்ரில்லர் பாணியில் வெளியானது வ்ருஷகர்மா பட ட்ரெய்லர்:
ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த வ்ருஷகர்மா படத்தை இயக்குநர் கார்த்திக் தண்டூ எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் நாக சைதன்யா உடன் இணைந்து நடிகர்கள் மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, சத்யா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் மாதம் 4-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஓகா தாரா படத்தைப் பாராட்டிய சிரஞ்சீவி – நானி…!
நடிகர் நாக சைத்தன்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Here it is, the #VrushakarmaTrailer!
I’ve been waiting to share this with you all. I’m grateful I got to play a part in a film this ambitious. This one is super close to my heart, and I can’t wait for you to experience it on the big screen. ❤️
https://t.co/g2WkO563Xq
Please do experience it with the best sound and visual equipment available to you . My sincere apologies on the delay .. thankful for all your patience and support .
#VrushakarmaOnDec4
@karthikdandu86 @Meenakshiioffl @BvsnP @aryasukku #SparshShrivastava @AJANEESHB #RagulDHerian @Srinagendra_Art @NavinNooli @SVCCofficial @SukumarWritings @ivyofficial2023
— chaitanya akkineni (@chay_akkineni) November 26, 2026
Also Read… பிக்பாஸிடம் செல்லமாக சண்டை போட்ட அன்சரின் மகள்… வைரலாகும் கியூட் வீடியொ!