ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.5,000 பென்ஷன்.. இந்த திட்டத்தில் இப்படி முதலீடு செய்யுங்கள்!
Get 5000 Rupees Monthly Pension Post Retirement | ஓய்வுக்கு பிறகு முதியவர்களுக்கு கடுமையான நிதி சிக்கல் ஏற்படும். அப்போது அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகை மாத ஊதியமாக கிடைத்தால் சிறந்ததாக இருக்கும். அவ்வாறு மாத ஊதிய வழங்கும் அசத்தல் திட்டம் குறித்து பார்க்கலாம்.
மனிதர்களாக பிறந்தவர்களுக்கு எப்போதுமே பண தேவை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அதற்காக தான் பலரும் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், ஓய்வு காலத்தில் ஒருவர் தனது நிதி தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள வேலைக்கு செல்ல முடியாது. அப்போது அவருக்கு ஏற்படும் தினசரி செலவுகள், மருத்துவ செலவுகள் மற்றும் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே தான், ஒருவர் தான் பணியில் இருக்கும்போதே தனது ஓய்வுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும் என கூறப்படுகிறது.
ரூ.5,000 மாத பென்ஷன் பெற உதவும் திட்டம்
வேலை செய்யும்போது ஓய்வுக்காக தனியாக பணத்தை எடுத்து வைப்பது சற்று சிரமமான ஒன்றுதான். அதற்காக தான் தனியார் வங்கிகள், அரசு என பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களில் முதலீடு செய்து ஓய்வு காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற முடியும். இந்த நிலையில், ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.5,000 பென்ஷன் பெற உதவும் அரசின் அசத்தல் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : தனியார் ஊழியர்களுக்கு இபிஎஃப்ஓ முக்கிய அறிவிப்பு.. இனி ஊழியர்களே பங்களிப்பு செலுத்தலாம்
பணியில் இருக்கும்போதே முதலீடு செய்யலாம்
அரசு பொதுமக்களுக்காக அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா (APY – Atal Pension Yojana) எனும் பென்ஷன் திட்டம். இந்த திட்டத்தில், ஊழியர்கள் தாங்கள் பணியில் இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை முதலீடு செய்து ஓய்வுக்கு பிறகு முதலீடு செய்த பணத்தை மாத ஊதியம் அல்லது பென்ஷன் போல பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : பழைய தங்கத்தை விற்று, புது தங்கம் வாங்க திட்டமா?.. 13 சதவீதம் வரி.. கவனமாக செயல்படுங்கள்!
எவ்வளவு பென்ஷன் வழங்கப்படும்
ஒருவர் எவ்வளவு பங்களிப்பு செய்கிறாரோ அதற்கு ஏற்ப அவருக்கு பென்ஷன் கிடைக்கும். உதாரணமாக, ஒருவர் செய்யும் முதலீடுக்கு ஏற்ப அவருக்கு மாதம் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ,4,000 மற்றும் ரூ.5,000 என பென்ஷன் வழங்கப்படும்.
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்
மாதம் ரூ.1,000 பென்ஷன் பெற 30 வயதை கடந்த ஒருவர் மாதம் ரூ.116 முதலீடு செய்ய வேண்டும். ரூ.2,000 பென்ஷன் பெற விரும்பும் நபர் மாதம் ரூ.231 முதலீடு செய்ய வேண்டும். ரூ.3,000 பென்ஷன் பெற விரும்பும் நபர் மாதம் ரூ.347 முதலீடு செய்ய வேண்டும். இதுவே மாதம் ரூ.4,000 பென்ஷன் பெற வேண்டும் என விரும்பும் நபர் ரூ.462 முதலீடு செய்ய வேண்டும். மேலும் ரூ.5,000 பென்ஷன் பெற வேண்டும் என விரும்பும் நபர் ரூ.577 முதலீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.