பழைய தங்கத்தை விற்று, புது தங்கம் வாங்க திட்டமா?.. 13 சதவீதம் வரி.. கவனமாக செயல்படுங்கள்!
Hidden Charges Behind Old Gold Exchange | தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், தங்களது பழைய தங்கத்தை விற்பனை செய்து புதிய தங்கத்தை வாங்க நினைக்கின்றனர். இந்த நிலையில், பழைய தங்கத்தை மாற்றுவதில் மறைந்திருக்கும் கட்டணங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
தங்கம் விலை (Gold Price) ஏறினாலும், சரிந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மனிதர்களுக்கு இன்னும் குறையாமலே உள்ளது. தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்தாலும் கூட நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோததான் செய்கிறது. புதிய தங்கத்தை வாங்குவதை போல, சிலர் தங்களிடம் இருக்கும் பழைய தங்கத்தை கொடுத்துவிட்டு புதிய தங்கத்தை வாங்குகின்றனர். இவ்வாறு செய்வதன் பின்னணியில் இருக்கும் சிக்கல்கள் குறித்து தெரிந்துக்கொள்ளாமலே பலரும் இந்த வேலையை செய்கின்றனர். இந்த நிலையில் தான், பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்கத்தை வாங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
சட்டம் கூறுவது என்ன?
பழைய தங்க நகைகளை கொடுத்து புதிய தங்க நகைகளை வாங்குவது பலருக்கும் மிகவும் சுலபமானதாக தோன்றலாம். ஆனால், அது அத்தனை சுலபமான விஷயம் அல்ல. காரணம், பழைய தங்கத்தை கொடுத்து, புதிய தங்கம் வாங்குவதில் பல மறைமுக கட்டணங்கள் உள்ளன. அது சமானியர்களின் சேமிப்பை கரைக்கும் மிகப்பெரிய அபாயத்தை கொண்டுள்ளது. வருமான வரித்துறையின் விதிகளின்படி, எக்ஸ்சேஞ்ச் என்பது 2 கட்ட வர்த்தகம் ஆகும். அதாவது, நகைக் கடைகளில் பழைய தங்கத்தை கொடுத்து பணம் வாங்குவது அல்லது பழைய நகையை கொடுத்து புதிய நகை வாங்குவது.
இதையும் படிங்க : மாருதி முதல் ஹூண்டாய் வரை.. சர்ரென உயரும் கார்கள் விலை.. திடீர் விலை உயர்வு ஏன்?




இரண்டுக்கும் வருமான வரி கணக்கீடு உண்டு
மேலே குறிப்பிட்டுள்ள முறைப்படி பழைய தங்கத்தை கொடுத்து, புதிய தங்கத்தை வாங்குவதற்கு, பணத்தை வாங்குவதற்கும் வருமான வரி கணக்கீடு உண்டு. தங்க நகைகள் சொத்தகான கருதப்படுவதன் காரணமாக, அவற்றை விற்பனை செய்யும்போது கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ் (Capital Gains Tax) விதிக்கப்படும். அதாவது, நீங்கள் ஒரு நகையை வாங்கி அதனை சுமார் 24 மாதங்கள் கழித்து விற்பனை செய்யும்போது அதற்கான லாங் டர்ம் கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ் விதிக்கப்படும்.
இதையும் படிங்க : இனி ஆன்லைன் மோசடிகளுக்கு வாய்ப்பே இல்லை?.. 2027 முதல் ஆர்பிஐ அறிமுகம் செய்யும் 3 முக்கிய விதிமுறைகள்!
13 சதவீதம் வரி விதிக்கப்படும்
பழைய தங்க நகையை விற்று பெறப்படும் தொகைக்கு 12.5 சதவீதம் வரி மற்றும் 4 சதவீத செஸ் வரி சேர்த்து மொத்தமாக 13 சதவீதம் வரி செலுத்த வேண்டும். உதாரணமாக, 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய தங்கத்தின் மதிப்பு ரூ.7 லட்சமாக இருந்தால், அதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.40 லட்சமாக இருக்கும். இதில் வாங்கிய தொகையை கழிக்கும் பட்சத்தில் ரூ.33 லட்சத்திற்கு 13 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.