AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Bank Holiday : டிசம்பர் மாதம் இந்த 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முன்கூட்டியே திட்டமிடுங்கள்!

December 2026 Bank Holidays in Tamil Nadu | வார விடுமுறை உள்ளிட்டவற்றின் காரணமாக வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் மொத்தம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது எந்த எந்த நாட்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Bank Holiday : டிசம்பர் மாதம் இந்த 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முன்கூட்டியே திட்டமிடுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Nov 2026 15:26 PM IST

வார விடுமுறை, பண்டிகை, உள்ளூர் திருவிழாக்கள் ஆகியவற்றின் காரணமாக வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை வழங்கப்படும். நவம்பர் (November) மாதம் அவ்வாறு வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்னும் ஒருசில நாட்களில் டிசம்பர் (December) மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தான், டிசம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holiday) அளிக்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, டிசம்பர் மாதம் தமிழகத்தில் மொத்தம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், டிசம்பரில் எந்த எந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிசம்பர் மாதம் மொத்தம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

  • டிசம்பர் 06, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
  • டிசம்பர் 12, 2026 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் என்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
  • டிசம்பர் 13, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
  • டிசம்பர் 20, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
  • டிசம்பர் 25, 2026 – கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
  • டிசம்பர் 26, 2026 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
  • டிசம்பர் 27, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 6 நாட்கள் டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க : வேலை Vs சுயதொழில்.. இருவரில் யார் அதிகம் சம்பளம் பெறுகின்றனர்.. அறிக்கை கூறுவது இதுதான்!

வாடிக்கையாளர்கள் சேவைகளை பெற என்ன செய்ய வேண்டும்?

டிசம்பர் மாதத்தில் மேலே குறிப்பிட்டுள்ள இந்த 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே வங்கி பணிகளை முடித்துக்கொள்ள வேண்டும். இதுதவிர வங்கிகளின் இதர சேவைகளான ஆன்லைனில் பேங்கிங் (Online Banking), மொபைல் செயலிகள் (Mobile Apps), ஏடிஎம் (ATM – Automated Teller Machine), யுபிஐ (UPI – Unified Payment Interface) ஆகியவை தொடர்ந்து செயல்பாட்டில் தான் இருக்கும். அவற்றை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வழக்கம் போல பண பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us