AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனியார் ஊழியர்களுக்கு இபிஎஃப்ஓ முக்கிய அறிவிப்பு.. இனி ஊழியர்களே பங்களிப்பு செலுத்தலாம்!

EPFO PF Contribution Update | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தனியார் ஊழியர்களுக்கான ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தனியார் ஊழியர்களுக்கு இபிஎஃப்ஓ முக்கிய அறிவிப்பு.. இனி ஊழியர்களே பங்களிப்பு செலுத்தலாம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Nov 2026 17:54 PM IST

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) , அவ்வப்போது ஊழியர்களுக்கான பல அட்டகாசமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் பங்களிப்பு செலுத்துவது தொடர்பாக, தனியார் துறை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தனியார் துறை ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பு முறையே மாற உள்ளது. இந்த நிலையில், தனியார் துறை ஊழியர்களுக்கு இபிஎஃப்ஓ அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தனியார் ஊழியர்களுக்கு இபிஎஃப்ஓ முக்கிய அறிவிப்பு

தற்போதைய நிலவரம் படி, ஊழியர்கள் தங்களது தகுதியான ஊதியத்தில் இருந்து 12 சதவீத தொகையை தங்களது பிஎஃப் கணக்கில் மாதம்தோறும் பங்களிப்பாக செலுத்தி வருகின்றனர். இதில், ஊழியர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கூடுதல் தொகையை பங்களிப்பு செய்யும் வசதி ஏற்கனவே உள்ளது. ஆனால், அது நிறுவனங்களின் Payroll மூலமாகவே செல்கிறது. அதாவது, நீங்கள் எவ்வளவு தொகையை கூடுதலாக பங்களிப்பு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தெரிவித்தால், நீங்கள் பணியாற்றும் நிறுவனம் உங்களுக்காக உங்களது ஊதியத்தில் இருந்து அந்த தொகையை பிடித்தம் செய்து பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும்.

இதையும் படிங்க : மாருதி முதல் ஹூண்டாய் வரை.. சர்ரென உயரும் கார்கள் விலை.. திடீர் விலை உயர்வு ஏன்?

நேரடியாக பணத்தை வரவு வைக்கலாம் : புதிய முன்மொழிவு

ஆனால், இந்த புதிய முன்மொழிவின் படி, ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் தாங்களே கூடுதலாக பணத்தை வரவு வைக்க முடியும். அதாவது, ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தொகை இல்லாமல், கூடுதலாக எவ்வளவு தொகையை செலுத்த விரும்புகிறார்களோ, அதனை நேரடியாக அவர்களே தங்களது பிஎஃப் கணக்கில் செலுத்திக்கொள்ள முடியும்.

இதையும் படிங்க : இனி ஆன்லைன் மோசடிகளுக்கு வாய்ப்பே இல்லை?.. 2027 முதல் ஆர்பிஐ அறிமுகம் செய்யும் 3 முக்கிய விதிமுறைகள்!

இந்த திட்டம் யாருக்கு மிகவும் உதவியாக இருக்கும்?

இந்தியாவில் ஸ்விக்கி, சொமேட்டோ டெலிவரி ஊழியர்கள் உள்ளிட்ட கிக் ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் டிப்ஸ் உள்ளிட்ட கூடுதல் ஊதியத்தை சேமிக்க பாதுகாப்பான மற்றும் சிறந்த வழியை உருவாக்கும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இந்த முக்கிய மாற்றத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்த புதிய அம்சம், லட்சக்கணக்கான தனியார் ஊழியர்களுக்கு மிகுந்த பலன்களை தரும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us