AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 150 நாட்களுக்குள் இலவச மிதிவண்டி.. தமிழக அரசு உத்தரவு..

Free Bicycle For Students: அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக 150 நாட்களுக்குள் அனைத்து மிதிவண்டிகளையும் மாணவர்களுக்கு வழங்கி முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மிதிவண்டிகளை ஒதுக்கீடு செய்து உரிய முறையில் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 150 நாட்களுக்குள் இலவச மிதிவண்டி.. தமிழக அரசு உத்தரவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Nov 2026 17:48 PM IST

நவம்பர் 25, 2026: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 150 நாட்களுக்குள் இலவச நவீன மிதிவண்டிகளை வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக ரூ.277 கோடி செலவில் 5.32 லட்சம் மிதிவண்டிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மிதிவண்டிகளுடன் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளன.

ரூ.277 கோடியில் 5.32 லட்சம் மிதிவண்டிகள் கொள்முதல்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மொத்தம் 5,31,388 நவீன மிதிவண்டிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கு.. உதயநிதி பேட்டியில் இடம்பெற்ற சர்ச்சைக்குறிய கருத்து – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

இதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பிரபல சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது மாணவர்களுக்கான மிதிவண்டிகளைத் தயாரிக்கும் பணிகளில் அந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மாணவர்களுக்கு ரூ.4,369 மதிப்பில் சைக்கிள்

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண், பெண் என தனித்தனியாக மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்களுக்கு 2,36,133 நவீன மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. ஒரு மிதிவண்டியின் கொள்முதல் விலை ரூ.4,369 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாணவிகளுக்கு 2,95,255 மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. ஒரு மிதிவண்டியின் கொள்முதல் விலை ரூ.4,245 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சைக்கிளுடன் ஹெல்மெட், தண்ணீர் பாட்டிலும் இலவசம்

இந்த முறை மிதிவண்டிகளுடன் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – கனிமொழி வலியுறுத்தல்

150 நாட்களுக்குள் விநியோகிக்க உத்தரவு!

அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக 150 நாட்களுக்குள் அனைத்து மிதிவண்டிகளையும் மாணவர்களுக்கு வழங்கி முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மிதிவண்டிகளை ஒதுக்கீடு செய்து உரிய முறையில் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Follow Us