கலப்படம் இல்லாத தங்கத்தை வாங்குவது எப்படி.. இவற்றை கட்டாயம் பின்பற்றுங்கள்!
How to Identify Pure Gold and Avoid Adulteration | தங்கம் விலை சரிவில் இருக்கும் இந்த சூழலில் தான், தங்கத்தின் தூய்மை குறித்து புதிய பூகம்பம் ஒன்று கிளமியுள்ளது. அதாவது, தங்கத்தில் கலப்படம் செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு (Gold) மிகவும் மோசனான ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், இந்த ஆண்டு தங்கம் விலை நிலையற்ற தன்மையை கொண்டுள்ளது. அதாவது, ஆண்டின் தொடக்கத்தில் கடும் உயர்வை சந்தித்த தங்கம், அதன் பிறகு கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. அதன்படி, தற்போது தங்கம் கடும் சரிவில் உள்ளது. இவ்வாறு தங்கம் விலை ஒரு பக்கம் நிலையற்ற தன்மையை கொண்டு இருக்க, தங்கத்தின் தரத்தில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, தங்கத்தில் கலப்படம் செய்யப்படுவது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், தங்கம் தூய்மையானதா, கலப்படம் அற்றதா என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்க கலப்பட விவகாரம்
தற்போது வரை இந்தியாவில், நகை வாங்கும்போது அதன் எடை, 916 ஹால்மார்க் முத்திரை மற்றும் கடையில் உள்ள பரிசோதனை இயந்திரம் ஆகியவற்றை மட்டுமே நம்பி பொதுமக்கள் நகை வாங்குகின்றனர். ஆனால், இந்த இயந்திரங்கள் ஒருவேளை தவறான முடிவை காட்டினால் என்ன ஆகும் என்ற அச்சத்தை ராஜஸ்தானில் நடைபெற்ற தங்க கலப்பட விவகாரம் யோசிக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க : 26 ஆண்டுகளுக்குப் பிறகு கோல்ட் ஸ்பாட் வருகிறதா? தோனி புகைப்படம் சொல்வதென்ன?
பாதுகாப்பாக நகை வாங்குவது எப்படி?
- இந்திய தர நிர்ணய அமைப்பான பிஐஎஸ், பொதுமக்களை எப்போதும் ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகளை மட்டுமே வாங்க பரித்துறைக்கிறது.
- தங்க நகைகளில் உள்ள 6 இலக்க HUID எண்ணை BIS Care செயலியில் சரிப்பார்ப்பது மிகவும் அவசியமாக உள்ளது.
- தங்க நகைகளின் எடை மற்றும் தூய்மை தொடர்பான விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்ட முறையான ரசீதனை நகைக் கடைகளிடம் இருந்து கட்டாயம் பெற வேண்டும்.
- நீங்கள் வாங்கும் தங்க நகைகளின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பிஐஎஸ் அங்கீகாரம் பெற்ற பரிசோதனை மையங்களில் சோதனை மேற்கொள்ளலாம்.
- அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனை முடிவுகளில் உங்களுக்கு முரண்பாடுகள் இருந்தால், ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
இதையும் படிங்க : இனி ஆன்லைன் மோசடிகளுக்கு வாய்ப்பே இல்லை?.. 2027 முதல் ஆர்பிஐ அறிமுகம் செய்யும் 3 முக்கிய விதிமுறைகள்!
நகை வாங்கும்போது இவற்றை கட்டாயம் செய்யுங்கள்
தங்க நகைகளில் மேற்கொள்ளப்பட்ட ரீனியம் கப்பட்ட மோசடி இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நகை வாங்கும்போது நம்பகமான விற்பனையாளர்களையும், முறையான HUID சரிப்பார்ப்பையும் மேற்கொள்வது அவசியமாக உள்ளது. இரவு, பகலாக உழைத்து சேமித்து தங்கம் வாங்கும்போது அதன் தரம் மற்றும் தூய்மையை தெரிந்துக்கொள்ள சில கூடுதல் வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.