2 அடி உயரமுள்ள எருமை மாடு ரூ.1 கோடி.. ராஜஸ்தான் கண்காட்சியில் சுவாரஸ்யம்!
2-Foot Tall Mini Buffalo Valued at 1 Crore Rupees | ராஜஸ்தானின் புஷகர் பகுதியில் மிகவும் பிரபலமான கால்நடை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வெறும் 2 அடி உயரம் கொண்ட எருமை தான் தற்போது பேசுபொருளாக உள்ளது.
புஷ்கர், நவம்பர் 25 : ராஜஸ்தானில் (Rajasthan) நடைபெற்று வரும் கால்நடை கண்காட்சியில் (Cattle Exhibition) வெறும் 2 அடி உயரமே கொண்ட குட்டி எருமை மாடு ஒன்று பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமன்றி, இணையத்திலும் அந்த 2 அடி எருமை மாடு தான் பேசுபொருளாக உள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் கண்காட்சியில் அந்த எருமை மாடு கவனம் பெற்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கால்நடை கண்காட்சியில் கவனம் பெற்ற 2 அடி உயர எருமை மாடு
மிகவும் புகழ்பெற்ற இந்த புஷ்கர் கால்நடை கண்காட்சியில் பிரம்மாண்டமான எருமைகள், உயரமான குதிரைகளே அதிக அளவில் பங்கேற்கும். ஆனால், இந்த ஆண்டும் மிகவும் சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, இந்த ஆண்டு கண்காட்சிக்கு மராட்டியத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பிங்கி என்ற குட்டி எருமை மாடு ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க : விவசாயி என்ற ஒற்றைச் சொல்லுக்குள் மறைந்திருக்கும் பல தொழில்கள்! வருமானம் எங்கிருந்து வருகிறது?
செல்பி எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்
வழக்கமான மாடுகளை போல் இல்லாமல் இந்த பிங்கி எருமை மாடு மிகவும் சிறியதாக உள்ளது. மாடுகளை பார்க்கும்போதோ அல்லது அவற்றின் அருகே செல்லும்போதோ நம்மை குத்திவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்துக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த மாடோ பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், சாதுவாகவும் உள்ளது அங்கு வரும் பார்வையாளர்களின் கவனத்தை பெறுகிறது. குறிப்பாக இந்த சிறிய ரக எருமை மாடுடன் செல்பி எடுப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்.. உச்சநீதிமன்றம் சென்ற கர்நாடக அரசு.. தமிழக அரசு மீது குற்றச்சாட்டு
விலையை கேட்டு வாயடைத்துபோன பார்வையாளர்கள்
இந்த சிறிய ரக எருமை மாட்டை பார்த்து வியப்படைந்த பலரும், அதன் விலையை கேட்டு வாயடைத்து போயுள்ளனர். அதாவது, இந்த எருமை மாடு மிகவும் அரிய வகை இனத்தை சேர்ந்தது ஆகும். இந்த நிலையில் தான், அந்த எருமை மாட்டின் விலை ரூ.1 கோடி என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். அதனை கேட்டு அந்த கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
வெறும் 2 அடி உயரமே உள்ள எருமை மாடு ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்படுவது குறித்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.