AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

School Leave: கொட்டித்தீர்த்த மழை.. திருச்செந்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..

திருச்செந்தூர், பரமன்குறிச்சி, காயாமொழி, ஆழந்தலை, நா. முத்தையாபுரம், நடுநாலுமூலைக்கிணறு, கீழநாலுமூலைக்கிணறு, வீரபாண்டியன்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

School Leave: கொட்டித்தீர்த்த மழை.. திருச்செந்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 26 Nov 2026 09:08 AM IST

நவம்பர் 26, 2026: தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 26) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

திருச்செந்தூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருச்செந்தூர், பரமன்குறிச்சி, காயாமொழி, ஆழந்தலை, தலைமுடி, நா. முத்தையாபுரம், நடுநாலுமூலைக்கிணறு, கீழநாலுமூலைக்கிணறு, வீரபாண்டியன்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பரவலாகக் கனமழை பெய்தது.

இதனால் பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: கார்த்திகை தீபம் அன்று நேர்ந்த சோகம்.. விளக்கில் டீசல் கேன் பட்டு தீ விபத்து.. 2 வயது குழந்தை மற்றும் தந்தை உடல் கருகி உயிரிழப்பு..

கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான வெயில் நிலவி வந்தது. இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர். இந்நிலையில், தற்போது பெய்துள்ள மழை மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 26) திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டது அம்பலம்.. தலைமறைவான பிரகாஷை பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ்..

நாளை (நவம்பர் 27) நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Follow Us