AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நெல்லை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள்: இன்று முதல் 5 நாட்களுக்கு பயணிகள் ரயில்கள் ரத்து.. முழு விவரம் இதோ..

Nellai Junction Maintenance Work: திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 10 மணிக்குப் புறப்படும் திருச்செந்தூர் – நெல்லை பயணிகள் ரயில் நவம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நெல்லை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள்: இன்று முதல் 5 நாட்களுக்கு பயணிகள் ரயில்கள் ரத்து.. முழு விவரம் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Nov 2026 09:55 AM IST

நவம்பர் 26, 2026: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, நவம்பர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு திருச்செந்தூர், செங்கோட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, இரண்டு ரயில்கள் முழுமையாகவும், மற்ற இரண்டு ரயில்கள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுகின்றன.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 10 மணிக்குப் புறப்படும் திருச்செந்தூர் – நெல்லை பயணிகள் ரயில் நவம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், நெல்லையில் இருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்படும் நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயிலும் இதே 5 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ. 400 கோடி மோசடி வழக்கு.. அன்பில் மகேஷ் உள்ளிட்ட மூவரிடம் 2வது நாளாக தீவிர விசாரணை!

செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

செங்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை – நெல்லை பயணிகள் ரயில், நவம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரை சேரன்மாதேவி – நெல்லை சந்திப்பு இடையே பகுதி அளவில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், நெல்லையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும் நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயிலும் நெல்லை – சேரன்மாதேவி இடையே பகுதி அளவில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் நெல்லைக்குப் பதிலாக சேரன்மாதேவியில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கார்த்திகை தீபம் அன்று நேர்ந்த சோகம்.. விளக்கில் டீசல் கேன் பட்டு தீ விபத்து.. 2 வயது குழந்தை மற்றும் தந்தை உடல் கருகி உயிரிழப்பு..

பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக ரயில் சேவை இருந்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், ரயில் நிலையங்களில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளால் அடுத்த 5 நாட்களுக்கு இந்த ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை அதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

 

Follow Us