ஏன் கிட்ட வராதீங்க.. அன்சர் – தன்யாவிடையே வெடித்த சண்டை – வைரலாகும் ப்ரோமோ!
Ansar vs Dhanya Clash: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 12வது வாரத்தில் உள்ள நிலையில், பேமிலி வீக்காக இந்த வாரம் உள்ளது. இன்று (25/11/2026) வெளியான 4வது ப்ரோமோவில், அன்சர் மற்றும் தன்யா இருவரிடையே சண்டை வெடித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படும் ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கிய நிலையில், இன்றுடன் 80 நாட்களாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிலையில், தற்போது 12வது வாரத்தில் உள்ளது. இந்த வாரம் முழுக்க பேமிலி வீக் என்ற நிலையில், 4 இதுவரை போட்டியாளர்களின் குடும்பம் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சென்றது. இன்று (25/11/2026) அன்சர் மற்றும் பிருத்வி என இருவரின் குடும்பம் வந்த நிலையில், அன்சரின் ( Adavadi Ansar) மனைவி அவருக்கு சிறப்பான அட்வைஸ் கொடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது வெளியான 4வது ப்ரோமோவில் தன்யா மற்றும் அன்சர் என இருவரிடையே சண்டை வெடித்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி நிலையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: விமலின் நவோரியா திரைப்படத்தின் ப்ரோமோ பாடலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!
பிக் பாஸில் தன்யா மற்றும் அன்சரிடையே வெடித்த சண்டை:
இந்த ப்ரோமோவில் தன்யா, அன்சரிடம் டீ போட்டுருக்காங்க.. அதை எடுங்க-னு சொல்லுறது கேப்டன்ஷி தான என கேட்டிருந்தார். உடனே அன்சர், இதை அட்ரஸ் பண்ணு.. அத அட்ரஸ் பண்ணு-னு என்ட சொல்லாத.. ப்ரீட்ச்சில் வைத்திருந்த கப்பை எடுத்து குடிச்சிட்டு.. அத திருப்பி அதே இடத்தில வை என சொல்லுற என தன்யாவிடம் அன்சர் கத்தி பேசியிருந்தார். உடனே அன்சர், எப்பனாலும் எடுத்து குடிப்பாங்க.. நீங்க அவன்ட (ஜேசன்) சொல்லிடீங்க லா.. அவன் எடுத்து குடிப்பான்.. நீங்க ஒவ்வொரு பிளான் போட்டு.. அத என்னிடம் வந்து சொல்லாதீங்க என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: நீ யாருனு காட்டுறதுக்காகதான வந்த.. அன்சரை லெஃப்ட் ரைட் வாங்கிய மனைவி – வைரலாகும் ப்ரோமோ!
மேலும் அன்சர், தன்யாவிடம் “ஜேசனுக்கு உனக்குத்தான் இந்த பிரச்சனை ஆரம்பமாகிறது. அதை நீ என்னிடம் சொல்ற.. ஒண்ணுமே இல்லாத விஷயத்தை நீ சொல்லும்போது அது நல்லாவே இல்ல என அதில் அவர் கூறியுள்ளார். இதற்கு தன்யா கண்கலங்கியிருந்தார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 80வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day80 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/Src2anouuu
— Vijay Television (@vijaytelevision) November 25, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தமிழில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 12வது இறுதியில் உள்ள நிலையில், மொத்தமாக 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கிறார்கள். மேலும் இந்த வாரத்திலும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்ற நிலையில், பிருத்வி மற்றும் தன்யா இருவரில் யாரவது ஒருவர் வெளியேறுவார்கள் என கூறப்படுகிறது.