AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : திருமண வரவேற்பு.. வித்தியாசமாக என்ட்ரி கொடுத்த ஜோடி!

Newlyweds' Unique Transparent Balloon Entrance | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், திருமண வரவேற்பில் ஜோடி ஒன்று Transparent Balloon-ல் என்ட்ரி கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : திருமண வரவேற்பு.. வித்தியாசமாக என்ட்ரி கொடுத்த ஜோடி!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Nov 2026 19:57 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், திருமண வரவேற்பில் புதுமண ஜோடி கொடுத்த என்ட்ரி தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமண வரவேற்பு : வித்தியாசமாக என்ட்ரி கொடுத்த ஜோடி

இந்தியாவில் திருமணங்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்திய குடும்பங்கள் கடன் வாங்கியாவது தங்களது வீட்டு திருமணங்களை மிகவும் பிரம்மாண்டமாக நடத்துகின்றன. ஒவ்வொருவரும் மிகவும் வித்தியாசமான வரவேற்பை நடத்துகின்றனர். அந்த வகையில், ஜோடி ஒன்று தங்களது திருமண வரவேற்பில் கொடுத்த மிகவும் வித்தியாசமான என்ட்ரி தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : ரெஸ்ட் இல்லை.. தொடர்ந்து 5700 கி.மீ பயணம் செய்த பறவை… ஆச்சரிய சம்பவம்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெரிய Transparent Balloon உள்ளே மணமக்கள் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் மெதுவாக, அந்த பலூனுக்குள் இருந்தபடியே மெதுவாக மேடைக்கு நடந்துச் செல்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : இரவு முழுவதும் பார்க் செய்ய அலைந்த ஓட்டுநர் இல்லாத மின்சார கார்.. வைரலாகும் வீடியோ!

Transparent Balloon-ல் என்ட்ரி கொடுத்த மணமக்கள்

பொதுவாக திருமண வரவேற்புகளின் போது மணமக்கள் நடனமாடுவது, மணமக்களை பல்லக்கில் வைத்து அழைத்து வருவது, மாப்பிள்ளை குதிரை வண்டியில் வருவது, மணமக்கள் காரில் அல்லது பைக்கில் வருவது என மிகவும் வித்தியாசமாக என்ட்ரி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த தம்பதி மிகவும் வித்தியாசமாக யோசித்து பலூனில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

கருத்து பகிர்ந்து வரும் பொதுமக்கள்

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us