AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகம் முழுவதும் நூலக புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடா? விசாரணைக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரி வெங்கடரமனை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

Fake Book Scam: மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநருமான ஜி. வெங்கடரமனை விசாரணையை கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கெனவே திரட்டியுள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்து, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நூலக புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடா? விசாரணைக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரி வெங்கடரமனை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Nov 2026 20:15 PM IST

நவம்பர் 25, 2026: தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களை விசாரிக்க, மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஜி. வெங்கடரமனை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற புத்தகக் கொள்முதல் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையை இவர் கண்காணிக்க வேண்டும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலகத்தில் முறைகேடு புகார்!

கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

மேலும் படிக்க: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 150 நாட்களுக்குள் இலவச மிதிவண்டி.. தமிழக அரசு உத்தரவு..

இதனைத் தொடர்ந்து கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஆதாரங்களைச் சேகரித்தனர்.

20 ஆண்டுகால கொள்முதல் குறித்து விசாரணை

தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை கண்காணிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: ரூ.842 கோடியில் புதுப்பிக்கப்படும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம்! விமான நிலையத்திற்கு இணையான நவீன வசதிகள்..

குப்பைபோல் கிடக்கும் புத்தகங்கள் – நீதிபதி அதிருப்தி

இந்த வழக்கு விசாரணையின்போது, நூலகங்களுக்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்ட பல்வேறு புத்தகங்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் குப்பைபோல் கிடப்பதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இதனால் புத்தகங்களின் கொள்முதல் நடைமுறைகள் மற்றும் அதற்காகச் செலவிடப்பட்ட அரசு நிதி தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

விசாரணைக்கு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி நியமனம்

இந்த நிலையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநருமான ஜி. வெங்கடரமனை விசாரணையை கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கெனவே திரட்டியுள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்து, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடுகள் நடந்ததா, அரசு நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது இந்த விசாரணையின் மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us