AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தொகுதி மறுவரையறை: “திமுகவின் ஆதரவு நிலைப்பாடு பெரும் அதிர்ச்சியை தருகிறது”.. திருமாவளவன் கவலை!!

Thirumavalavan Slams DMK Support for Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவு அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருவதாகவும், இது தேசிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வரலாற்றுப் பிழை எனவும் திருமாவளவன் விமர்சித்துள்ளார். 543 இடங்களை 25 ஆண்டுகளுக்கு நிலைப்படுத்த வேண்டும் எனவும், அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வரத் திட்டமிடப்படுவதாகவும் எச்சரித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை: “திமுகவின் ஆதரவு நிலைப்பாடு பெரும் அதிர்ச்சியை தருகிறது”.. திருமாவளவன் கவலை!!
திருமாவளவன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 28 Nov 2026 12:21 PM IST

சென்னை, நவ.28: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள முடிவு, திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தந்த அதிர்ச்சியை விடப் பெரும் அதிர்ச்சியை தருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த முடிவு தேசிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது ஒரு வரலாற்றுப் பிழை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் சதி அரசியலுக்குத் திமுக துணை போயிருக்கிறது என்பதை எண்ணும் போது பெரும் கவலை அளிப்பதாகவும், இதனால் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்திய அளவிலும் அரசியல் ரீதியாகப் பல பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதா.. நிபந்தனைகளுடன் திமுக ஆதரவு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

543 இடங்களை நிலைப்படுத்தும் முடிவு மாற்றம்:

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த போது, தொகுதி மறுவரையறையே கூடாது என்பதும், தற்போதுள்ள 543 என்ற எண்ணிக்கையை அப்படியே நிலைப்படுத்தி 25 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் செய்யாமல் வைத்திருந்து மகளிர் இட ஒதுக்கீட்டை அதிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் முடிவாக எடுக்கப்பட்டதாக திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த நிலைப்பாட்டிலிருந்து திமுக மாறியிருப்பது மிகவும் ஆபத்தானது எனக் குறிப்பிட்ட அவர், 7.18 சதவீதப் பிரதிநிதித்துவம் மற்றும் 25 ஆண்டுப் பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகள் குறித்துப் பேசப்பட்டாலும், தொகுதி மறுவரையறை என்பது பாஜகவின் சதித் திட்டத்திற்கு வழிவகுக்கும் விவகாரம் எனத் தெரிவித்துள்ளார்.

ஒரே ஆட்சி மற்றும் அதிபர் ஆட்சி முனைப்பு:

50 சதவீத இட உயர்வு அல்லது விகிதாச்சார அடிப்படையிலான எண்ணிக்கை உயர்வு என எவ்வாறு கொண்டு வரப்பட்டாலும், அது பாஜக அல்லது சங் பரிவார் அமைப்புகளுக்கே சாதகமாக முடியும் எனத் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்காக அல்லாமல், ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்ற செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மாநிலக் கட்சிகளைச் செல்லாததாக ஆக்கி அமெரிக்க அதிபர் ஆட்சி போன்ற அதிபர் ஆட்சி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுமே இந்தத் தொகுதி மறுவரையறை முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். வட இந்திய மாநிலங்களில் கூடுதல் எண்ணிக்கையைப் பெற்றுத் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான வழக்கு.. ரூ.2 லட்சம் தருவதாக கூறி 3 இளைஞர்களை அடித்து துன்புறுத்திய சிபிசிஐடி போலீசார்.. பரபரப்பு புகார்!

தேசிய அரசியலில் தாக்கமும் விவாதமும்:

மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தால் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற குரல் முதலில் எழுந்த நிலையில், தற்போது 50 சதவீத இட உயர்வு என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருப்பதற்கான பின்னணியையும் திருமாவளவன் அலசியுள்ளார். திமுகவின் ஆதரவு இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என்ற சூழலில், இந்த முடிவு திமுக வரலாற்றிலும் தேசிய அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Follow Us