AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.15, ரூ.25 மற்றும் ரூ.50-க்கு ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Jio's New Happy New Year 2.0 Data Plans | ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு அசத்தலான ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.15 முதல் பல்வேறு அட்டகாசமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.15, ரூ.25 மற்றும் ரூ.50-க்கு ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Nov 2026 15:07 PM IST

இந்திய தொலைத்தொடர்பு துறையில் (Telecom Department) ஜாம்பவானாக இருக்கும் ஜியோ (Jio) நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்ட ரீச்சார்ஜ் திட்டங்களை (Recharge Schemes) அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது 10 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக ஹேப்பி நியூ இயர் 2.0 என்ற திட்டத்தின் கீழ் சில ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரீச்சார்ஜ் திட்டங்களில் மிகவும் குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஹேப்பி நியூ இயர் 2.0 : அசத்தல் ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ

ஜியோ நிறுவனம் ஹேப்பி நியூ இயர் திட்டத்தின் கீழ் பல அட்டாகாசமான ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் ரூ.15 மற்றும் ரூ.25 மற்றும் ரூ.50-க்கு டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.15-க்கான டேட்டா திட்டம்

ஜியோ நிறுவனம் ரூ.15-க்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் தடையற்ற 5ஜி டேட்டா சேவையை பெற முடியும். இந்த திட்டத்திற்கான கால அவகாசம் ஒரு நாள் ஆகும்.

இதையும் படிங்க : வரும் வாரங்களில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

ரூ.25-க்கான டேட்டா திட்டம்

ரூ..15 திட்டத்தை போலவே, ரூ.25-க்கும் ஜியோ நிறுவனம் டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திலும் வாடிக்கையாளர் அன்லிமிடெட் டேட்டாவை பெற முடியும். ஆனால், இந்த திட்டத்தின் கால அவகாசம் 2 நாட்கள் ஆகும். 2 நாட்கள் முழுவதும் அதாவது 48 மணி நேரத்திற்கு தடையில்லாமல் 5ஜி சேவையை பெற முடியும்.

ரூ.50-க்கான டேட்டா திட்டம்

இதேபோல தான் ரூ.50-க்கான இரவு நேர டேட்டா திட்டத்தையும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் பயனர்கள் தினமும் நள்ளிரவு 12 மணி முதல், அதிகாலை 5 மணி வரை அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சேவையை பெற முடியும். இந்த திட்டத்தின் கால அவகாசம் 28 நாட்கள் ஆகும்.

இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமாகும் iQOO 16.. முழு விவரம் இதோ!

பலரும் நாள் முழுவதும் டேட்டாவை பயன்படுத்திவிட்டு, இரவு நேரத்தில் பயன்படுத்துவதற்காக தனியாக டேட்டாவை மட்டும் ஒவ்வொரு நாளும் ரீச்சார்ஜ் செய்வர். அவர்களுக்கான அசத்தல் திட்டமாக இது உள்ளது. இதனை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம், பயனர் ஏற்கனவே செய்துள்ள தின்சரி ரீச்சார்ஜ் திட்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது.

Follow Us