விஜய் குறித்து ரசிகர் பேசியபோது த்ரிஷா கொடுத்த ரியாக்ஷன் – வைரலாகும் வீடியோ
Trisha Krishnan Reaction Fan Asked Thalapathy VIjay | தமிழ் சினிமாவில் நேற்று மிகபும் பிரமாண்டமாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நாயகியாக நடித்த த்ரிஷா படம் பார்க்க வந்தபோது விஜய் குறித்து ரசிகர் பேசிய போது சிரித்துக்கொண்டே அவர் சென்ற வீடியோ வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். இவருடன் நாயகியாக அறிமுகம் ஆன பல நடிகைகள் தற்போது ஃபீல்ட் அவுட் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தனது முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை விட்டுக்கொடுக்காமல் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கிய நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தொடர்ந்து பல முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாகப் பலப் படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் இந்த ஆண்டில் முதலாவதாக தமிழ் சினிமாவில் வெளியான படம் கருப்பு.
இந்த கருப்பு படம் நேற்று 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியானது. இந்தப் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி உட்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அதில் நடிகை த்ரிஷா கிருஷ்ணனும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி படத்தை பார்க்க சென்ற இடத்தில் ரசிகர் ஒருவர் சொன்ன விசயத்திற்கு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் வெட்கப்பட்ட சிரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.




விஜய் குறித்து ரசிகர் பேசியபோது த்ரிஷா கொடுத்த ரியாக்ஷன்:
அதன்படி கருப்பு படத்தின் திரையிடல் முடிந்த பிறகு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் காரில் ஏறி வீட்டிற்கு செல்லும் போது ரசிகர் ஒருவர் நான் தளபதியை கேட்டேன் என்று சொல்லுங்கள் என்று த்ரிஷாவிடம் கூற அவர் அதற்கு சரி என்றவாரு வெட்கப்பட்டு சிரிக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றது. முன்னதாக தளபதி விஜய் மற்றும் த்ரிஷா கிருஷ்ணனின் நட்பு குறித்து பல கிசுகிசுக்கள் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
Also Read… சிவகார்த்திகேயனின் வேலும் மயிலும் ஆல்பம் பாடல் 1 மில்லியன் பார்வைகளை கடந்தது
இணையத்தில் வைரலாகும் த்ரிஷா கிருஷ்ணன் வீடியோ:
Actress @TrishaKrishnan faces an unexpected moment
While heading home after the screening of ‘Kuruppu’, a fan’s comment grabbed everyone’s attention!
“Please tell Thalapathy that I asked about him…” the fan said, and Trisha responded with a shy smile #Trisha #Thalapathy pic.twitter.com/FoiYIdK2L7— Telangana Ahead (@telanganaahead) May 15, 2026
Also Read… ஜூன் மாதத்தில் ரிலீஸ் தேதியை குறிவைக்கும் ஜன நாயகன் படக்குழு… வைரலாகும் தகவல்