AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜூன் மாதத்தில் ரிலீஸ் தேதியை குறிவைக்கும் ஜன நாயகன் படக்குழு… வைரலாகும் தகவல்

Thalapathy Vijay Jana Nayagan Movie Release Update: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராக ஆகி உள்ள தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் இறுதியாக உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

ஜூன் மாதத்தில் ரிலீஸ் தேதியை குறிவைக்கும் ஜன நாயகன் படக்குழு… வைரலாகும் தகவல்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 May 2026 17:28 PM IST

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வலம் வந்த தளபதி விஜய் தற்போது தமிழகத்தில் நடைப்பெற்ற 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இதன் காரணமாக அவர் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக உருவான படம் ஜன நாயகன். தீவிர அரசியலில் களமிறங்கியதால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் தனது நடிப்பில் 69-வது படமாக உருவாகி உள்ள ஜன நாயகன் தான் கடைசிப் படம் என்று நடிகர் விஜய் முன்னதாகவே தெரிவித்து இருந்தார். இது அவரது ரசிகர்களிடையே சொகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் ஜன நாயகன் படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்பட்டது.

தொடர்ந்து இந்தப் படம் கடந்த ஜனவரி மாதமே திரையரங்குகளில் வெளியாக வேண்டியது. ஆனால் படத்தின் சென்சார் பிரச்சனை காரணமாக தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தள்ளிபோனது. இந்த நிலையில் தேர்தல் முடிந்து தற்போது விஜயும் முதலமைச்சராக பதவியேற்றுவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் ஜன நாயகன் படம் இனி எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியாகும் என்று திரைத்துறையில் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

ஜூன் மாதத்தில் ரிலீஸ் தேதியை குறிவைக்கும் ஜன நாயகன் படக்குழு:

‘ஜன நாயகன்’ திரைப்படமானது, தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு, தளபதியின் பிறந்தநாள் வாரத்தோடு இணைந்து ஜூன் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கான அவரது இறுதிப் பிரியாவிடைத் திரைப்படமாக அமையவுள்ளது. அரசியல் கட்சித் தொண்டர்கள் மத்தியில் இத்திரைப்படம் மிகச்சிறப்பானதொரு தொடக்கத்தைப் பெறும் என்றும், பெரும் அளவிலான ரசிகர் ஆரவாரம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கருப்பு படத்தின் மேட்னி ஷோவும் ரத்தானது… இன்று வெளியாகுமா படம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… எமோஷ்னலான வீடியோவை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி

Follow Us