AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்தின் மேட்னி ஷோவும் ரத்தானது… இன்று வெளியாகுமா படம்

Karuppu Noon shows have been cancelled | நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படத்தின் காலை காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மேட்னி காட்சியும் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு படத்தின் மேட்னி ஷோவும் ரத்தானது… இன்று வெளியாகுமா படம்
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 May 2026 13:39 PM IST

தமிழ் சினிமா ரசிகர்கள் இன்று மிகவும் எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்தது கருப்பு படத்தின் ரிலீஸ் தான். அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் கருப்பு. இந்தப் படம் இன்று காலை 9 மணி சிறப்பு காட்சியில் இருந்து ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று நல்லிரவு படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு சில தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பு படத்தின் காலை வெளியாக இருந்த சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பில் அதற்கு அடுத்த காட்சிகள் ஒளிபரப்பாகுமா இல்லையா என்று குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் கருப்பு படத்தின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுடன் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக கருப்பு படத்தின் படப்பிடிப்பிற்காக சில இடங்களை பயன்படுத்தியதாகவும் அதற்கான உரிய தொகையைப் படக்குழு உரிய நபர்களிடம் கொடுக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே கருப்பு படத்தின் காலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது அடுத்தடுத்த காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவித்தனர். ஆனால் தற்போது மதிய காட்சிகளும் ஒளிபரப்பாகவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கருப்பு படத்தின் மேட்னி ஷோவும் ரத்தானது:

சென்னையில் மிகவும் பிரபலமான திரையரங்காக உள்ள கமலா சினிமா டைரக்கடர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, விநியோகத் தரப்பான ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’யிடமிருந்து சற்று முன் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீடு இன்று மாலை முதல் மட்டுமே எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, இன்று மதியம் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அதற்கான பணத்தைத் திருப்பியளிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இப்படத்தை இன்று காண ஆவலுடன் காத்திருந்த அனைவருக்கும் இது உண்மையிலேயே மிகுந்த மனவேதனையை அளிப்பதாகும். உங்கள் ஏமாற்றத்தை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்வதுடன், உங்கள் அனைவருடனும் அந்த வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். நிலைமை விரைவில் சீராகி, இந்த காத்திருப்பு ஒரு நேர்மறையான முடிவை எட்டும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

Also Read… லோகேஷ் கனகராஜ் இனி இன்டெர்வியூ கொடுக்கமாட்டாரா? – இயக்குநர் ரத்னகுமார் சொன்ன விஷயம்!

கமலா சினிமாவின் டைரக்டர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து… முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறிய இயக்குநர் சங்கர்

Follow Us