AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரண்டு நாட்களில் கருப்பு பட ட்ரெயலர் செய்த சாதனை – கொண்டாட்டத்தில் படக்குழு

Karuppu Movie Trailer crosses 25 Million Views | நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இரண்டு நாட்களில் கருப்பு பட ட்ரெயலர் செய்த சாதனை – கொண்டாட்டத்தில் படக்குழு
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 May 2026 16:01 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் கோர்ட் ரூம் ட்ராமாவாக உருவாகி உள்ளது. இந்தப் படத்தினை எழுதி இயக்கியது மட்டும் இன்றி ஆர்.ஜே.பாலாஜி ஒரு முக்கிய வேடத்தை ஏற்று நடித்து உள்ளார். மேலும் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து உள்ளர். இவர்களுடன் இணைந்து மலையாள சினிமாவில் பிரபல நடிகராக உள்ள நடிகர் இந்திரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார், மேலும் நட்டி நடராஜ் நீதிபதியாக நடித்து உள்ள நிலையில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் இன்னும் இரண்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளிலும் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. நேற்று ஹைதராபாத்தில் படத்தின் நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.

யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்தது கருப்பு பட ட்ரெய்லர்:

இந்தப் கருப்பு படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ள ஆர்.ஜே.பாலாஜியின் கொட்டத்தை அடக்குவதற்காக கருப்பு சாமியாக நடிகர் சூர்யா களமிறங்குவது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. இது ட்ரெய்லரைப் பார்க்கையில் தெளிவாக தெரிகிறது. இந்த ட்ரெய்லர் வெளியான இரண்டு நாட்களில் இதுவரை யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்து உள்ளதாக படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… கருப்பு பட விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கி அட்லூரி – வைரலாகும் வீடியோ

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வாரண்ட் வெப் சீரிஸ் பார்ப்பதற்கு முன்பு விலங்கு சீரிஸை மிஸ் செய்யாமல் பாருங்கள்

Follow Us