AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: கருப்பன் வரான் வழிமறிக்காதே.. இன்று வெளியாகிறது சூர்யாவின் கருப்பு பட ட்ரெய்லர்!

Karuppu Movie Trailer Update: நடிகர் சூர்யாவின் நடிப்பில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகிவந்த படம் கருப்பு. இப்படம் வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கும் நிலையில், இன்று 2026 மே 10ம் தேதியில் டபுள் ட்ரீட்டாக ட்ரெய்லர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Karuppu: கருப்பன் வரான் வழிமறிக்காதே.. இன்று வெளியாகிறது சூர்யாவின் கருப்பு பட ட்ரெய்லர்!
கருப்பு டிரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 May 2026 12:36 PM IST

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் 3வது திரைப்படமாக தயாராகியுள்ள படம்தான் கருப்பு (Karuppu). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் சூர்யா45 என அறிவிக்கப்பட்டு, கோவையில் இதன் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கியிருந்தது. இதில் ஆக்ஷன் நாயகனாக சூர்யா (Suriya) நடித்துள்ள நிலையில், அவருக்கு ஏற்ற அதிரடி நாயகியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளார். இந்த கருப்பு படமானது நீதி, தெய்வீகம், ஆக்ஷ்ன் மற்றும் ஆகா மொத்தத்தில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தி ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கேளே ஆர்.எஸ். பிரபு தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இதுவரையில் இப்படைத்திருந்துஹ் 4 பாடல்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் அரசியல் பிரச்சனைகள் இருந்ததால் கருப்பு பட ட்ரெய்லர் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று தளபதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள. அதன் டபுள் ட்ரீட்டாக கருப்பு படத்தின் ட்ரெய்லர் இன்று (10/05/2026) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: திரிஷா முதல் சங்கீதா வரை.. விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்!

கருப்பு படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு பதிவு:

சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் ட்ரெய்லர், இன்று 2026 மே 10ம் தேதியில் மாலையில் 7 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ட்ரெய்லர் முழுக்க ஆக்ஷன், அதிரடி மற்றும் தெய்வீகம் நிறைந்த கதையாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் நிச்சயம் மக்கள் மத்தியில் அதிரடி வரவேற்பை பெரும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முதலமைச்சராக பதிவியேற்ற மகன் விஜய்.. கண்கலங்கிய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்!

கருப்பு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகவும் நிலையில், அத்துடன் இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் இன்று தொடங்குகிறது. கருப்பு பட டிக்கெட் ப்ரீ புக்கிங் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கவுள்ளது. அந்த வகையில் இப்படமானது பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவிற்கு ஒரு கம்பேக் படமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. சூர்யாவிற்கு இறுதியாக ரெட்ரோ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதையடுத்து கருப்பு படமானது நிச்சயம் சிறப்பான வரவேற்பை கொடுக்கும் என வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us