AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

S.A.Chandrasekhar: முதலமைச்சராக பதிவியேற்ற மகன் விஜய்.. கண்கலங்கிய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்!

S.A. Chandrasekhars Emotional Moment: தமிழ் சினிமாவில் நாயகனாக, தற்போது முதலமைச்சராக பதிவியேற்றிருக்கிறார் தளபதி விஜய். அவரின் பதிவியேற்பு விழாவில், இயக்குனரும், தவெக தலைவர் விஜய்யின் தந்தையாக இருப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் விஜய் முதல்வராக பதவியேற்ற தருணத்தில் கண்களாகியுள்ளார்.

S.A.Chandrasekhar: முதலமைச்சராக பதிவியேற்ற மகன் விஜய்.. கண்கலங்கிய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்!
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 May 2026 12:13 PM IST

கோலிவுட் சினிமாவில் ஹீரோவாக இருந்து, தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றிருப்பவர் ஜோசப் விஜய் (Joseph Vijay). நடந்துமுடிந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று இன்று 2026 மே 10ம் தேதியில் தமிழகத்தின் முதலமைச்சராக பதிவியேற்றுள்ளார் விஜய் (Tamil Nadu Chief Minister Joseph Vijay). அந்த வகையில் இந்த விழாவில், கோலிவுட் சினிமா பிரபலங்கள் முதல் பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த விழாவில் கிட்டத்தட்ட 9 அமைச்சர்கள் பதிவியேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் (SA Chandrasekhar) மற்றும் தாய் ஷோபா (Shoba), அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டிருந்தனர். மேலும் அந்த நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தாய் ஷோபா, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ச.ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற தருணத்தில் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கண்கலங்கினார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: திரிஷா முதல் சங்கீதா வரை.. விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்!

முதலமைச்சராக பதிவியேற்ற விஜய்யின் நிகழ்ச்சியில் கண்கலங்கிய எஸ்.ஏ. சந்திரசேகர்:

விஜய் முதலமைச்சராக பதிவியேற்ற விழாவில் முன் இருக்கையில் விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா இருவரும் அமர்ந்திருந்தனர். அந்த வகையில் விஜய் தமிழக முதலமைச்சராக பதிவியேற்ற தருணத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் கண்கலங்கியிருந்தார். விஜயை சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக்கி, தற்போது தமிழக முதலமைச்சராக முன்னேறியதற்கு தந்தை சந்திரசேகர்தான் முழு முதல் காரணம் என்று கூறலாம். அந்த வகையில் ஒரு தந்தையாக மகனின் பதிவியேற்பு விழாவில் அவர் உணர்ச்சியாக கண்கலங்கியுள்ளார்.

இதையும் படிங்க: மாதவன் முதல் பா.ரஞ்சித் வரை… தமிழக முதல்வராக பதவியேற்ற ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்!

விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியானது, இன்று 2026 மே 10ம் தேதியில் சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் நண்பர்கள், அரசியல்வாதிகள், குடும்பத்தினர்கள் மற்றும் திரிஷா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தனது தாயுடன் நடிகை திரிஷா கலந்துகொண்டிருந்தனர். மேலும் சஞ்சீவ், நடிகை சங்கீதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இந்த விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

Follow Us