AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருமணத்துக்கு தடையாக இருந்த கள்ளக்காதலி.. வாளிபர் செய்த கொடூர செயல்!

Man Murders Lover with Beer Bottle and Stone | கர்நாகடா மாநிலம், பெலகாவியில் திருமணத்திற்கு தடையாக இருந்த கள்ளக்காதலியை இளைஞர் ஒருவர் கற்கள் மற்றும் பீர் பாட்டிலை கொண்டு தாக்கி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்துக்கு தடையாக இருந்த கள்ளக்காதலி.. வாளிபர் செய்த கொடூர செயல்!
கள்ளக்காதல் ஜோடி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 Nov 2026 07:20 AM IST

பெலகாவி, நவம்பர் 29 : கர்நாடகாவில் (Karnataka) அருகே தனது திருமணத்தை தொடர்ந்து தடுத்து நிறுத்தி வந்த கள்ளக்காதலியை, ஒருவர் பீர் பாட்டில் மற்றும் கல்லால் கொடூரமாக அடித்து கொலை சந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 28 வயது நபரை அதிரடியாக கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், திருமணத்துக்கு தடையாக இருந்த கள்ளக்காதலியை ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

38 வயது பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த 28 வயது நபர்

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், சிக்கோடி தாலுகா, நானா கிராமத்தை சேர்ந்தவர் ஐரா வதி. இவருக்கு 38 வயது. இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், தனது பொருளாதார தேவைகளுக்காக சிக்கோடி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு பாகல்கோட்டை சேர்ந்த சஞ்சய் என்ற 28 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தொகுதி மறுவரையறையால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படாது.. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம்

நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய பழக்கம்

அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது. எனவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டுள்ளனர். அப்போதெல்லாம் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான், சஞ்சய்க்கு அவரது வீட்டில் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். அது தெரிந்த ஐரா வதி, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, சஞ்சய்க்கு இரண்டு முறை திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், அவற்றை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : “அனைத்து மாநிலங்களுக்கும் 50% அதிகரிப்பு!”.. தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு!

3வது முறையும் திருமணத்தை நிறுத்தியதால் இளைஞர் வெறிச்செயல்

இந்த நிலையில், சஞ்சய்க்கு மூன்றாவது முறை நடைபெற்ற திருமண ஏற்பாடுகளையும் ஐரா வதி தடுத்து நிறுத்தியுள்ளார். எனவே, இரா வதி உயிருடன் இருந்தால் தன்னால் திருமணம் செய்துக்கொள்ள முடியாது என நினைத்த சஞ்சய், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில், நவம்பர் 20, 2026 அன்று ஐரா வதியை தனியாக பேச சஞ்சய் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது சஞ்சய் பீர் பாட்டில் மற்றும் கற்களால் அவரை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்துள்ளனர்.

Follow Us