AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண்கள் கழிவறையில் கேமரா.. தனியார் நிறுவன மேனேஜரின் அதிர்ச்சி செயல்.. அதிரடி கைது!

Manager Arrested for Secret Camera in Women's Restroom | சென்னை வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய மேனேஜரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஊழியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெண்கள் கழிவறையில் கேமரா.. தனியார் நிறுவன மேனேஜரின் அதிர்ச்சி செயல்.. அதிரடி கைது!
கைது செய்யப்பட்ட வன்னிராஜ்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Nov 2026 06:47 AM IST

வானகரம், நவம்பர் 29 : சென்னை (Chennai) வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா (Secret Camera) பொருத்தியை மேனேஜரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கழிவறையை பயன்படுத்தச் சென்ற பெண் ஊழியர் ஒருவர் அந்த கேமராவை பார்த்த நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், நிறுவனத்தின் மேனேஜரே அந்த நிறுவனத்தில் இருக்கும் பெண்கள் கழிவறையில் கேமரா பொருத்திய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய மேனேஜர்

சென்னை வானகரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த 42 வயது பெண்ணும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவர் கழிவறை பயன்படுத்த சென்றுள்ளார். அப்போது அங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இதையும் படிங்க : பெண்கள் சுயதொழில் தொடங்க ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம்: எப்படி விண்ணப்பிப்பது?

வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார்

கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்ட அந்த பெண் அது குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை நிர்வாகம் காவல்துறையிடம் கொண்டு சென்றுள்ளது. புகாரின் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு சென்ற போலீசார், அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

நிறுவனத்தின் மேனேஜர் செய்த இழிவான செயல்

அதாவது, அந்த சிசிடிவி காட்சிகளில் அந்த நிறுவனத்தின் மேனேஜர் சில நாட்களுக்கு முன்பு பெண்களின் கழிவறைக்குள் சென்று நீண்ட நேரத்திற்கு பிறகு வெளியே வந்தது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் 38 வயதான வன்னிராஜ் என்ற அவரை போலீசார் உற்று நோக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : ஏற்காடு மலைப்பாதை பள்ளத்தில் 12 வயது சிறுமி சடலம் மீட்பு – கொலை செய்யப்பட்டாரா? துணிக்கடைகளில் விசாரணை தீவிரம்

கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்

அப்போது அவர் தான் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தியதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த சிறிய ரக கேமரா, இரண்டு விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த நிறுவன ஊழியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us