தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு – அமித் ஷாவுடன் கனிமொழி சந்திப்பு
DMK MPs Amit Shah Meeting : டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை (Amit Shah) அவரது இல்லத்தில் சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்க முடிவெடுத்துள்ள நிலையில் திமுக எம்பி கனிமொழி, மக்களவை குழு தலைவர் டி. ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்டோர் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமித் ஷாவுடன் திமுக எம்பிகள் சந்திப்பு
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு திமுக எம்பி ராசா செய்தியாளர்களை சந்தித்து, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார். முன்னதாக தொகுதி மறுவரையறை மசோதாவிற்குதிமுக அரசு எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் ஆதரவு தெரிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிக்க : வெற்றிவேல் முருகனுக்கு… திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது! – விண்ணை முட்டிய பக்தர்கள் கோஷம்!




இதுகுறித்து விளக்கமளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறை என்ற ஆபத்து வரவுள்ளதால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என இந்தியாவிலேயே முதல் முறையாக எச்சரிக்கை மணி அடித்தது திமுகதான். 1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவிகித தொகுதிகள் உயர்வு எனும் இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே தொகுதி மறுவரையறையை நடந்திட திமுக ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற நவம்பர் 30, 2026 அன்று நடைபறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க : ஏற்காடு மலைப்பாதை பள்ளத்தில் 12 வயது சிறுமி சடலம் மீட்பு – கொலை செய்யப்பட்டாரா? துணிக்கடைகளில் விசாரணை தீவிரம்
தாக்கல் செய்யப்படும் 3 மசோதாக்கள்
இதற்கிடையே வருகிற நவம்பர் 30, 2026 திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உள்துறை அமைச்சர் அமித் ஷா யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்கிறார். மேலும் அரசியலமைப்பின் 132-வது திருத்த மசோதாவையும், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவையும் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.