AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தொகுதி மறுவரையறை ஆதரவு.. “தீராப்பழி ஏற்படும்”.. திமுக முடிவை மறுபரிசீலனை செய்ய கி.வீரமணி வேண்டுகோள்!!

K Veeramani Warns DMK Over Delimitation Bill Support: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்குத் திமுக ஆதரவு அளிக்கும் நிலையில், மக்கள் மன்றத்தில் கெட்ட பெயரும் தீராப் பழியும் ஏற்படும் எனத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்கத் திமுக தனது ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறை ஆதரவு.. “தீராப்பழி ஏற்படும்”.. திமுக முடிவை மறுபரிசீலனை செய்ய கி.வீரமணி வேண்டுகோள்!!
கி.வீரமணி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 28 Nov 2026 13:53 PM IST

சென்னை, நவ.28: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகப் பாஜக கொண்டு வர உள்ள மசோதாவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) ஆதரவு அளிக்கும் நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டு தனது அன்பு வேண்டுகோளையும் கடும் எச்சரிக்கையையும் முன்வைத்துள்ளார். திமுக நிலைப்பாட்டை மாற்றியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில், இந்த முடிவால் திமுகவுக்குத் தீராப்பழி ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுசீரமைப்புச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற விடாமல், மாநிலங்கள் குறிப்பாகத் தென்மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் சூழ்ச்சிக்கு வியூகம் அமைத்துத் தோற்கடித்த பெருமை திமுகவுக்கு வரலாற்றுப் பெருமையாக இருந்ததாகவும், ஆனால் தற்போதைய முடிவு பல்வேறு ஐயங்களை உருவாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை ஆதரவு.. “தமிழிக உரிமையை காப்பாற்றியுள்ளோம்”.. மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

கடந்த கால நிலைப்பாடும் ஐயங்களும்:

திமுக தலைமையின் காவலனாகத் திராவிடர் கழகம் உரிமையோடு கேட்கும் வேண்டுகோள் எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கி. வீரமணி, கடந்த காலங்களில் பாஜக மற்றும் அமித் ஷா தரப்பிலிருந்து எவ்வளவு வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும் அதனை நம்பித் தனது உரிமையை நிலைநாட்டத் தவறியதில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ச்சியாக அந்த நிலைப்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்த திமுக, தற்போது எடுக்கும் முடிவால் மக்கள் மன்றத்தில் திமுகவுக்குக் கெட்ட பெயரும் தீராப் பழியும் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். இது திராவிடர் கழகத்தின் கருத்து மட்டுமல்லாமல், அதன் பாதுகாப்பில் அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் அறிவுசார் பெருமக்களின் கருத்தாகவும் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

தென்மாநிலங்களின் உரிமையும் ஒற்றுமையும்:

தொகுதி மறுசீரமைப்பு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுள்ள முறையே தொடரும் என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும் எனக் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுடன் சேர்ந்து முக்கியமான முயற்சிகளை மேற்கொண்டதைக் கி. வீரமணி நினைவுகூர்ந்துள்ளார். அந்த வகையில் தென்மாநிலங்களைப் பாதிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கக் கூடாது என்றும், இந்திய அளவில் நமது குரல் நசுக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாடு அவசியம் என்பதையும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை: “திமுகவின் ஆதரவு நிலைப்பாடு பெரும் அதிர்ச்சியை தருகிறது”.. திருமாவளவன் கவலை!!

மறுபரிசீலனை செய்ய அவசர வேண்டுகோள்:

தொடர்ச்சியான சூழ்நிலைகளுக்கு மத்தியில், பெரும் கவலையுடன் இதனை அவசர வேண்டுகோளாகவும் உரிமை விளைவாகவும் திமுகவுக்கு முன்வைப்பதாகக் கி. வீரமணி தெரிவித்துள்ளார். உறவோடும் உரிமையோடும் இதனைச் சுட்டிக்காட்டுவது தங்களது கடமை எனக் குறிப்பிட்டுள்ள அவர், திமுக தனது இந்த ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் திராவிடர் கழகம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow Us