AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33% மகளிர் இடஒதுக்கீடு உறுதி! தடைகளை நீக்குவோம் – பிரதமர் மோடி அதிரடி உறுதி

PM Modi On Delimitation: நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்காக நவம்பர் 30 முதல் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33% மகளிர் இடஒதுக்கீடு உறுதி! தடைகளை நீக்குவோம் – பிரதமர் மோடி அதிரடி உறுதி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Nov 2026 13:52 PM IST

நவம்பர் 28, 2026: நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதற்குத் தடையாக இருக்கும் அனைத்து முட்டுக்கட்டைகளையும் நீக்குவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, “பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பல தசாப்தங்களாக இதற்கான போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தப் போராட்டத்தில் நானும் ஒருவனாக இருந்துள்ளேன். நமது நாரி சக்திக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறையுடன் மகளிர் இடஒதுக்கீடு


கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை, தொகுதி மறுவரையறையுடன் இணைத்து அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு, அதிகரிக்கப்படும் இடங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போதுள்ள 545 மக்களவை இடங்களிலேயே 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றன.

மேலும் படிக்க: மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பாஜக! திமுகவிடம் முக்கிய கோரிக்கை!

நவம்பர் 30-ம் தேதி சிறப்புக் கூட்டத்தொடர்

இதற்கிடையே, தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவருவதற்காக நவம்பர் 30 முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மக்களவை நவம்பர் 30-ம் தேதியும், மாநிலங்களவை டிசம்பர் 2-ம் தேதியும் கூடுகின்றன.

இதற்காக 2026-ம் ஆண்டுக்கான அரசியலமைப்பின் 132-வது திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தவும், மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கான உச்சவரம்பை 500-லிருந்து 650 ஆக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சுங்கச்சாவடிகளில் செல்லும்போது வாகன பதிவு எண்ணை மறைத்தால் 5 மடங்கு அபராதம்!

மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்களவை இடங்களை 50 சதவீதம் அதிகரித்து, மாற்றியமைக்கப்பட்ட தொகுதி ஒதுக்கீடு மற்றும் எல்லைகளை 2051-ம் ஆண்டு வரை நிலைநிறுத்தவும் மசோதாவில் திட்டமிடப்பட்டுள்ளது.

Follow Us