AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்தப் படம் எதன் அடிப்படையில் இருக்கும்? வைரலாகு தகவல்

Director Karthik Subbaraj Next Movie Update | தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் அடுத்தாக உருவாக உள்ள படம் எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்தப் படம் எதன் அடிப்படையில் இருக்கும்? வைரலாகு தகவல்
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Nov 2026 13:21 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj). இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை 10 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இவரது இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் டோரதி. இந்தப் படம் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஒரு ஆண் திருநங்கையாக மாறுவது எப்படி இருக்கும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் வெற்றி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டோரதி படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கார்த்திக் சுப்பராஜ் அடுத்தப் படம் எதன் அடிப்படையில் இருக்கும்?

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த திரைப்படம் புலியாட்டம் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. இதில் அதர்வா, பிரபு தேவா மற்றும் உபேந்திரா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கொடைக்கானலில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட காட்சியைத் தகுந்த வானிலைச் சூழலில் படம்பிடித்து, தனித்துவமான காட்சித் தன்மையைக் கொண்டுவர கார்த்திக் சுப்புராஜ் விரும்புகிறார். இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 20 முதல் சென்னையில் நீண்ட கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதன்பிறகு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் நேரடியாக நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதற்காக அந்த நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பு பட்ஜெட்டை முதலீடு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… பிசாசு படம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பீரியாட்டிக் கதையில்… மீண்டும் இணைகிறதா தனுஷ் – ஆனந்த் எல் ராய் கூட்டணி?

Follow Us