AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காலையில் அவசரமா? வெறும் 5 நிமிடத்தில் தேவதை போல ஜொலிக்க இதோ சூப்பர் மேக்கப் டிப்ஸ்!

5 Minute Makeup: காலையில் வேலைக்குச் செல்வது, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, வீட்டு வேலைகளைக் கவனிப்பது எனப் பல பொறுப்புகள் இருப்பதால் பெண்களுக்குத் தங்களை அழகுபடுத்திக் கொள்ள நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும், அதிக நேரம் செலவிடாமல் வெறும் ஐந்து நிமிடங்களில் முகத்திற்கு இயற்கையான பொலிவையும் புத்துணர்ச்சியையும் கொடுக்க முடியும். அதற்கு சில எளிய மேக்கப் முறைகளைப் பின்பற்றினாலே போதுமானது.

காலையில் அவசரமா? வெறும் 5 நிமிடத்தில் தேவதை போல ஜொலிக்க இதோ சூப்பர் மேக்கப் டிப்ஸ்!
மேக்கப் டிப்ஸ்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 28 Nov 2026 13:28 PM IST

காலையில் பிஸியாக இருக்கும் பெண்கள் வெறும் 5 நிமிடங்களில் எளிய மேக்கப் (5 Minute Makeup) செய்துகொள்ளலாம். முதலில் முகத்தைக் கழுவி மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். கனமான ஃபவுண்டேஷனுக்குப் பதிலாக பிபி கிரீம் அல்லது டின்டெட் மாய்ஸ்சரைசரைத் தேர்வு செய்யலாம். கண்களுக்குக் காஜல் அல்லது மஸ்காரா பயன்படுத்தி அழகை மேம்படுத்தலாம். கன்னங்களுக்கு லேசான பிளஷ் பயன்படுத்தினால் முகம் புத்துணர்ச்சியாகத் தெரியும். உதடுகளுக்கு லிப் பாம் அல்லது லேசான நிறத்திலான லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். இந்த எளிய வழிமுறைகள் மூலம் குறைந்த நேரத்தில் இயற்கையான அழகைப் பெற முடியும்.

Also Read: கூட்டத்தைத் தவிர்த்துத் தனிமையைத் தேர்ந்தெடுப்பவர்களா நீங்கள்?

1. சருமத்தைத் தயார்படுத்துங்கள்

முதலில் முகத்தைத் தண்ணீரால் நன்றாகக் கழுவி, சருமத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு சன்ஸ்கிரீன் தடவுவது மிகவும் அவசியம். இது சருமத்தில் ஈரப்பதத்தைப் பாதுகாப்பதுடன், சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவும்.

2. கனமான ஃபவுண்டேஷனைத் தவிர்க்கலாம்

தினமும் அலுவலகம் அல்லது வெளியிடங்களுக்குச் செல்லும்போது முழுமையான ஃபவுண்டேஷன் மேக்கப் அவசியமில்லை. அதற்குப் பதிலாக பிபி கிரீம் அல்லது டின்டெட் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இது முகத்தில் ஒரே மாதிரியான நிறத்தைக் கொடுப்பதுடன், இயற்கையான தோற்றத்தையும் அளிக்கும். கண்களுக்குக் கீழே கருவளையம் அல்லது முகத்தில் சிறிய தழும்புகள் இருந்தால் மட்டும் கன்சீலரைப் பயன்படுத்தலாம்.

3. கண்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

முகத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தை அழகாகக் காட்டுவதில் கண்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. எனவே, கண் இமைகளுக்கு லேசாக மஸ்காரா பயன்படுத்தலாம். அதேபோல், கண்களுக்கு மெல்லிய காஜல் அல்லது ஐலைனர் போடுவதன் மூலம் எளிமையான மேக்கப்பிலும் கண்களை அழகாக எடுத்துக்காட்ட முடியும்.

4. கன்னங்களுக்கு இயற்கையான நிறம் கொடுங்கள்

முகம் சோர்வாகத் தெரியாமல் புத்துணர்ச்சியுடன் இருக்க கன்னங்களில் லேசாக கிரீம் பிளஷ் பயன்படுத்தலாம். இதனை விரல்களால் மெதுவாகத் தடவி பரவச் செய்தால் போதுமானது. லிப் மற்றும் சீக் இரண்டுக்கும் பயன்படுத்தக்கூடிய மல்டி யூஸ் மேக்கப் பொருட்களைத் தேர்வு செய்வதன் மூலம் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

Also Read: கூட்டத்தைத் தவிர்த்துத் தனிமையைத் தேர்ந்தெடுப்பவர்களா நீங்கள்?

5. உதடுகளுக்கு நிறம் சேர்க்கலாம்

இறுதியாக உதடுகளுக்கு ஏற்ற லிப் பாம், லிப் டின்ட் அல்லது லேசான நிறத்திலான லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். இது முகத்திற்கு முழுமையான தோற்றத்தைக் கொடுக்கும். அதிக நேரம் செலவிடாமல் அழகாகத் தயாராக உதவும் இந்த எளிய முறைகளைப் பின்பற்றினால், பிஸியான காலைப் பொழுதிலும் ஐந்து நிமிடங்களில் இயற்கையான மேக்கப்புடன் தயாராகிவிடலாம்.

பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் அனைத்தும் பொதுவான விழிப்புணர்வு மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளன. உங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு தகுதிவாய்ந்த மருத்துவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Follow Us