Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Beauty Tips

Beauty Tips

அழகு குறிப்புகள் என்பது தோல், முடி மற்றும் உடலின் சரும பராமரிப்பை பற்றியதாகும். இயற்கையான முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஸ்பேக், ஹேர் மாஸ்க், மற்றும் சீரான உணவுமுறை ஆகியவை உடல் அழகை மேம்படுத்த உதவுகின்றன. பருத்தி எண்ணெய், ஆலிவ் ஆயில், வெள்ளரி சாறு, தேன் போன்ற இயற்கை பொருட்களை கொண்டு உங்களது முக அழகை பராமரிக்க முடியும். அதேநேரத்தில், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துகொள்வதன் மூலமும் உங்கள் சரும அழகை பராமரிக்கலாம். அதேநேரத்தில், தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது தோலின் ஈரப்பதத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், சரியான தூக்கம், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை போன்றவை உடல் ஆரோக்கியதுடன் அழகான தோற்றத்தை தரும். அழகு என்பது வெறும் வெளிப்புற தோற்றமல்ல; அது ஒருவரின் உடல், மனம் மற்றும் வாழ்வியலுடன் இணைந்த ஒரு முழுமையான கலை. அழகு பராமரிப்பில் செய்யக்கூடிய முக்கியமான விஷயங்களில் சீரான நாள்பட்ட பழக்கவழக்கங்கள். தினமும் முகத்தை சுத்தம் செய்தல், ஸ்கிரப் செய்தல், மற்றும் ஈரப்பதம் அளிக்கும் க்ரீம் அல்லது இயற்கை எண்ணெய்களை பயன்படுத்துதல் ஆகியவை முக தோலின் பிரகாசத்தை பாதுகாக்கும். குறிப்பாக, வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது தோலுக்கு எந்தவித தீங்கும் இல்லாமல் நல்ல விளைவுகளைத் தரும். வெள்ளரிக்காய், அலோவேரா ஜெல், தயிர், நிம்பந்தை, மஞ்சள் போன்றவை முகம் மற்றும் சரும பராமரிப்பில் சிறந்த உதவியாளர்களாக இருக்கின்றன. முடியின் அழகு பராமரிப்புக்கு பூண்டு எண்ணெய், தேங்காய் எண்ணெய், பெருங்காய நீர் போன்றவை நரை, ஒட்டாத முடி மற்றும் முடி உதிர்வை கட்டுப்படுத்தும். மேலும், தினமும் 6–8 மணி நேரம் தூங்குவது, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, சரியான உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுமுறையும் அழகின் பின்னணி சக்தியாக உள்ளன. இதுபோன்ற அழகு குறிப்புகள் தொடர்பான தகவல்களை காணலாம்.

Read More

Beauty Tips: முடி – சரும பராமரிப்பை பேண வேண்டுமா..? இந்த 5 மசாலாப் பொருட்கள் வரப்பிரசாதம்!

Hair and Skin care: தேங்காய் எண்ணெய், கடலை மாவு, எலுமிச்சை போன்றவற்றை சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்காக நீங்கள் பலமுறை பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அஞ்சறை பெட்டியில் இருக்கும் மணம் மற்றும் சுவையை தரும் மசாலாப் பொருட்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Skin Care: தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் கேன்சர் வருமா..? மருத்துவர் சஹானா விளக்கம்!

Sunscreen Causes Cancer: சன்ஸ்கிரீன் தோல் புற்றுநோய்க்கான முதன்மைக் காரணமான தீங்கு விளைவிக்கும் UV கதிர்களைத் தடுப்பதன் மூலம் தோல் புற்றுநோயைத் தடுக்கிறது. கடுமையான சூரிய ஒளியில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF கொண்ட ஃப்ராட்-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனைத் தேர்வு செய்யவும்.

Skin Care: சரும பிரச்சனையை சரிசெய்யும் இளநீர் மேஜிக்.. அழகையும் மேம்படுத்தும் அதிசயம்..!

Skin Care for Coconut Water: இளநீர் அடிப்படையில் சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், கரடுமுரடான மற்றும் வறண்ட சருமத்தை நீக்கவும், பளபளப்பைப் பராமரிக்கவும், தடிப்புகள் மற்றும் முகப்பரு பிரச்சனையைக் குறைக்கவும் உதவுகிறது. இளநீரை உங்கள் கைகளால் முகத்தில் நேரடியாகப் பூசாமல் இருப்பது நல்லது.

Beauty Tips: சருமத்தை பிரகாசமாக்கும் கற்றாழை – மஞ்சள் கலவை.. ஆனால்! இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

Aloe Vera and Turmeric for Glowing Skin: கடைகள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் ரசாயன அடிப்படையிலான பொருட்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகள் மற்றும் சரும அழகு குறிப்புகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இத்தகைய விஷயங்களில் மற்றொன்றும் இப்போது அதிகளவில் பேசப்படுகிறது. அதன்படி, கற்றாழை மஞ்சளை கலந்து தடவுவதாகும்.

Skin Care Tips: ஸ்க்ரப்பிங் செய்யும்போது இந்த தவறு வேண்டாம்.. சரும பொலிவு குறையும்.!

Scrubbing For Skin: ஸ்க்ரப்பிங் செய்யும் பழக்கம் சருமத்தில் ஆழமாக குவிந்துள்ள அழுக்குகளை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், ஸ்க்ரப்பிங் செய்வதற்கு முன்னும் பின்னும் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. இல்லையெனில், சருமப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும்.

Facial Massage: ஐஸ் கட்டி கொண்டு 5 நிமிட மசாஜ்… முகம் இவ்வளவு பொலிவு பெறுமா..?

Ice Facial Massage: ஐஸ் கட்டிகளால் முகத்தை மசாஜ் செய்வது பல நன்மைகளை தரும். இருப்பினும், ஆரோக்கியமான மற்றும் இளமையான சருமத்தைப் பராமரிக்க பலர் ஐஸ் கட்டிகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஐஸ் கட்டிகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்துவது சருமத்திற்கு உண்மையில் நன்மை பயக்குமா?

Glowing Skin: பளபளப்பான சருமம் வேண்டுமா..? வைட்டமின் ஈ வழங்கும் 5 காய்கறி உணவுகள்..!

How to Get Glowing Skin: நமது உணவில் உள்ள வைட்டமின் ஈ ஒரு சிறியளவில் கிடைத்தாலும், இது சரும பராமரிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாத்து மென்மையாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்கிறது. இதனுடன் வயதான அறிகுறிகளை மெதுவாக்குகிறது.

Mouth Darkness: உதடுகளை சுற்றி கருமை நிற வளையங்களா..? இதை செய்தால் போகும்..!

How to Remove Darkness around Mouth: உங்கள் சருமம் திடீரென கருமையாக மாறினால், முதல் படி முழு இரத்த பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். இரும்புச்சத்து, ஹீமோகுளோபின், வைட்டமின் டி மற்றும் தைராய்டு ஆகியவற்றை பரிசோதிப்பதும் அடங்கும். இதன்மூலம், சரியான தீர்வை கண்டறியலாம்.

Skin Care Tips: குளிக்கும் போது உப்பு – பால் மந்திரம்.. சருமத்தின் அழகை மீட்டெடுக்கும்!

Bath Tips For Skin: முகம் மட்டுமல்ல, உங்கள் கழுத்து, தொண்டை, கைகள் மற்றும் கால்கள் பல்வேறு இடங்களில் பழுப்பு நிறமாக இருப்பதைக் காணும்போது, ​​அந்த நேரத்தில், ஆண்கள் சாட்ஸ் அணியவும், பெண்கள் ஸ்லீவ்லெஸ் போன்ற ஆடைகளை அணியவும் தர்ம சங்டங்கள் கொள்கிறார்கள். அந்த நேரத்தில், உப்பு மற்றும் பால் கொண்டு தேய்ப்பது உங்களுக்கு பிரகாசமான சருமத்தைத் தரும்.

Beauty Tips: கழுத்தில் உள்ள கருமையான வடுவால் கவலையா..? இவை உங்கள் பிரச்சனையை சரிசெய்யும்!

Remove Dark Spots On The Neck: கழுத்துக்கு அருகில் உள்ள கரும்புள்ளிகளுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக, சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படுதல், இறந்த செல்கள் குவிதல், ஹார்மோன் மாற்றங்கள், உடல் பருமன் அல்லது சுத்தம் செய்யாத பழக்கம் போன்றவை ஆகும்.

Skin Tightening: இளம் வயதிலேயே வயதான தோற்றமா..? சருமத்தை இறுக செய்யும் சிறப்பான டிப்ஸ்!

Collagen Loss and Aging Skin: வயதாகும்போது கொலாஜன் அளவு குறைந்து தோல் தளர்ச்சி அடையும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், மரபணு, புகைபிடித்தல் போன்றவை இதற்குக் காரணம். ஆரோக்கியமான உணவு, போதுமான தண்ணீர், சன்ஸ்கிரீன் பயன்பாடு, வீட்டு வைத்தியங்கள் மூலம் இதைத் தடுக்கலாம். சரியான சருமப் பராமரிப்பு அவசியம்.

Rainy Season Skincare: மழைக்காலத்தில் முகம் டல் அடிக்கிறதா..? பொலிவான சருமத்திற்கான டிப்ஸ் இதோ!

Beat Monsoon Skin Problems: மழைக்காலத்தில் சருமப் பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்தக் கட்டுரை, வறண்ட சருமம், பருக்கள், மற்றும் சருமத் தொற்றுகள் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க வைட்டமின் சி நிறைந்த உணவுகள், கிரீன் டீ, ரோஸ் வாட்டர், மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.

Tamannaah’s Beauty Secret: பாலை போல் ஜொலிக்க வேண்டுமா..? முக பளபளப்புக்காக தமன்னா சொல்லும் அழகு ரகசியம்!

Tamannaah Bhatia's Skincare Routine: தமன்னா தனது அழகு ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார். முகப்பரு பிரச்சனைக்கு தனது எச்சிலைப் பயன்படுத்துவதாகவும், காபி பொடி, தேன், ரோஸ் வாட்டர், கடலை மாவு மற்றும் தயிர் கலந்த முகமூடிகளை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார். அவரது அழகு குறிப்புகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

எடை குறைப்பிற்கான சிறந்த உணவுமுறை எது? வெளியான புதிய ஆய்வு

Low-Fat Vegan Diet: புதிய ஆய்வு, குறைந்த கொழுப்புள்ள சைவ உணவுமுறை எடை குறைப்பில் மெடிட்டரேனியன் உணவதைவிட பயனுள்ளதாக கூறுகிறது. சுமார் 6 கிலோ எடை குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. தாவர உணவுகள் உடலின் அமிலத்தன்மையைக் குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

40 வயதிற்குப் பிறகு பெண்கள் செய்யும் மிகப்பெரிய சருமப் பராமரிப்பு தவறுகள் – டாக்டர் எச்சரிக்கை!

Skincare Mistakes: 40 வயதிற்கு பிறகு பெண்களின் சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது. சரும மருத்துவர் டாக்டர் ஸ்வேதா ராகுல் கூறும் 5 தவறுகள் மற்றும் அவற்றைத் தவிர்க்கும் வழிகள் கூறப்பட்டுள்ளன. சரியான பராமரிப்பால் ஆரோக்கியமான சருமம் சாத்தியமெனும் செய்திகள் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.