Winter Skin Care: அதீத குளிரால் சருமத்தில் வறட்சியா? எளிதாக நீக்கும் 4 வீட்டு குறிப்புகள்!
Winter Dry Skin Tips: குளிர்காலத்தில் பலரும் குளிரில் இருந்து தப்பிக்க சூடான நீரில் அதிக நேரம் குளிக்கிறார்கள். அந்தவகையில், முடிந்தவரை நீண்ட நேரம் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கவும். சூடான நீர் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை நீக்கும். இதன் காரணமாக, குளிக்கும்போது லேசான கிளென்சரைப் பயன்படுத்தலாம்.
குளிர்காலம் (Winter) அனைவருக்கும் பிடித்த பருவம் என்றாலும், அது பல சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். குளிர் உங்கள் சருமத்தை வறண்டதாகவும், உயிரற்றதாகவும் காட்டும். குளிர்காலம் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தையும் பறித்து, வறட்சிக்கு வழிவகுக்கிறது. இது மாதிரியான பருவ காலத்தின்போது, பலரும் குறைந்த அளவில் தண்ணீர் குடிக்கிறார்கள். இது சருமத்திற்கு (Skin Care) போதுமான நீரேற்றத்தை கொடுக்காமல் வறட்சியை கொடுக்கும். எனவே, குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். உதவியாக இருக்கும் சில வீட்டு குறிப்புகள் இங்கே.
ALSO READ: முகப்பருவால் முகம் முழுவதும் குழிகள்.. கவலை வேண்டாம்! இந்த தீர்வுகள் சரிசெய்யும்!
குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பது எப்படி?
- குளிர்காலத்தில் அதிக மாய்ஸ்சரைசர் மற்றும் ஹைலூரோனிக் அமிலத்தைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும், இது சரும வறட்சியைக் குறைக்கும்.
- குளிக்கும்போது லேசான கிளென்சரைப் பயன்படுத்துங்கள். கடுமையான ரசாயனங்கள் கொண்ட கிளென்சர்கள் உங்கள் சருமத்தை இன்னும் வறண்டதாக்கும். எனவே, ரசாயனங்கள் குறைந்த கிளென்சர் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
- குளிர்காலத்தில் பலரும் குளிரில் இருந்து தப்பிக்க சூடான நீரில் அதிக நேரம் குளிக்கிறார்கள். அந்தவகையில், முடிந்தவரை நீண்ட நேரம் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கவும். சூடான நீர் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை நீக்கும்.
மேலும், குளிர்காலத்தில் உங்கள் உடலை நீரேற்றமாகவும், சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.
வறண்ட சருமத்தை சரிசெய்யும் பயனுள்ள வீட்டு குறிப்புகள்:
முகத்தில் நெய் தடவுதல்:
நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தை உள்ளிருந்து குணப்படுத்தி, நீண்ட நேரம் ஈரப்பதமாக வைத்திருக்கும். குளிர்காலத்தில் உங்கள் சருமம் மிகவும் வறண்டு போனால், தூங்க செல்வதற்கு முன் நெய்யால் உங்கள் முகத்தை மசாஜ் செய்யலாம்.




தேங்காய் எண்ணெய் மசாஜ்:
தேங்காய் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் நிறைந்துள்ளன. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இவை உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும்.
கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல் வறண்ட சருமத்தைக் குறைக்க உதவுகிறது. இது ஈரப்பதத்தைத் தக்கவைத்து, வறண்ட சருமத்தை நீக்க உதவுகிறது. முகத்தைக் கழுவிய பின், கற்றாழை ஜெல்லைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.
ALSO READ: முகம் பளபளப்பாக மாறும்.. 5 நிமிட ஸ்கின் கேர் டிப்ஸ் இதோ!
பாதாம் எண்ணெய்:
குளிர்கால சருமத்திற்கு பாதாம் எண்ணெய் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது சருமத்தை மென்மையாக்கவும், கறைகளைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஆழமாக வளர்க்கின்றன. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் இதைக்கொண்டு உங்கள் முகத்தை மசாஜ் செய்யலாம்.