Winter Skin Care: குளிர்காலத்தில் சரும வறட்சி ஏன்..? சரிசெய்ய இயற்கை வழிகள் இதோ!
Dry Skin in Winter: குளிர்காலத்தில் சோப்புகள் பயன்படுத்துவது, உங்கள் சருமத்தை இன்னும் அதிகமாக உலர்த்தும். இதற்கு பதிலாக, சோப்பு இல்லாத மற்றும் ஈரப்பதமூட்டும் கிளென்சரைப் பயன்படுத்துங்கள். அப்படி இல்லையென்றால், பேஷ் வாஷை முகத்திற்கு பயன்படுத்தலாம். குளித்த பிறகு அல்லது முகத்தைக் கழுவிய பின் எப்போதும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
குளிர்காலத்தில் (Winter) பலரும் குளிரில் இருந்து தப்பிக்க வெந்நீர் காயவைத்து குளிக்கிறார்கள். இது உடலில் ஏற்படும் வலியை குறைத்து, அழுப்பை நீக்குகிறது. ஆனால், குளிர்காலத்தில் தினமும் வெந்நீரில் குளிப்பது சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை (Dry Skin) நீக்குகிறது. அதன்படி, மிகவும் சூடான நீரை காயவைத்து சாதாரண தண்ணீரை குளிக்க பயன்படுத்துவதற்குப் பதிலாக, வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள். குளிப்பதற்கான நேரத்தை 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்திருங்கள். குளித்த உடனேயே, உங்கள் சருமம் சற்று ஈரமாக இருக்கும்போது கிரீம் அல்லது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
ALSO READ: குளிர்காலத்தில் சூடான குளியலா..? இது தலை முடி உதிர்தலை ஏற்படுத்தும்!
சருமத்தை ஈரப்பதமாக வைக்க என்ன செய்யலாம்..?
குளிர்காலத்தில் சோப்புகள் பயன்படுத்துவது, உங்கள் சருமத்தை இன்னும் அதிகமாக உலர்த்தும். இதற்கு பதிலாக, சோப்பு இல்லாத மற்றும் ஈரப்பதமூட்டும் கிளென்சரைப் பயன்படுத்துங்கள். அப்படி இல்லையென்றால், பேஷ் வாஷை முகத்திற்கு பயன்படுத்தலாம். குளித்த பிறகு அல்லது முகத்தைக் கழுவிய பின் எப்போதும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து வறட்சியை தடுக்கும். மேலும், வாஷ்லீன், கிரீம்கள் பயன்படுத்துவதும் வறண்ட சருமத்திற்கு நல்லது.




தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாமா?
எண்ணெய்களை பயன்படுத்துவது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகின்றன. இதன் காரணமாக, குளிப்பதற்கு முன் அல்லது படுக்கைக்கு முன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை உங்கள் சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்யலாம். இது சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் வறட்சியைக் குறைக்கவும் உதவுகிறது. எண்ணெய் பயன்படுத்த விரும்பாதவர்கள், குளிர்காலத்தில் வறண்ட சருமத்திற்கு கற்றாழை ஜெல் மிகவும் நன்மை பயக்கும். கற்றாழை ஜெல்லை உங்கள் முகத்தில் தடவி இரவு முழுவதும் விட்டு விடுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இது சருமத்தை குளிர்வித்து, எரிச்சலைக் குறைத்து மென்மையாக்குகிறது.
தேன் இயற்கை மாய்ஸ்சரைசர்:
தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் என்று அழகு கலை நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, 1 டீஸ்பூன் தேனை உங்கள் முகத்தில் தடவி 2-3 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யலாம். இதன்பிறகு, 10-15 நிமிடங்களுக்குப் பிறகு சாதாரண நீரில் கழுவலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.
ALSO READ: முடி உதிர்தலை தடுக்கும் கற்றாழை.. தலைக்கு எப்படி பயன்படுத்துவது? மருத்துவர் சஹானா விளக்கம்!
வறண்ட சருமத்தை சரிசெய்யும் மற்ற வழிகள்:
- குளிர்காலத்தில் சரும வறட்சியை சரிசெய்ய நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கலாம்.
- பழங்கள், பச்சை காய்கறிகள், நட்ஸ் மற்றும் மீன்களை உங்கள் உணவில் தினந்தோறும் சேர்த்துக் கொள்ளலாம்.
- ஹீட்டர்களுக்கு மிக அருகில் உட்கார்ந்து குளிர் காய வேண்டாம். தேவைப்பட்டால் சுடுதண்ணீர் போன்றவற்றை குடிக்கலாம்.